அம்பலமான காவிகளின்
இரட்டை நிலைப்பாடு
ஜம்மு
காஷ்மீர் மாநிலத்தில் இரண்டே எம்.எல்.ஏ க்கள் கொண்ட காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சியின்
சஜத் லோனை முதல்வராக்க பாஜக முன்வந்ததன் மூலம் காவிகளின் இரட்டை நிலைப்பாடு அம்பலமாகி உள்ளது.
பெரும்பான்மை
இல்லாமல் குதிரை பேரத்தை மட்டும் நம்பி யெடியூரப்பா கர்னாடக முதல்வராக பதவியேற்கிறார்.
பெரும்பான்மையை நிரூபிக்க நாற்பத்தி எட்டு மணி நேர அவகாசம் மட்டுமே அளிக்கப்பட அதற்குள்
பேரங்கள் வெற்றியடையவில்லை என்பதால் ராஜினாமா செய்து விட்டு ஓடிப் போனார்.
ஒரு
மாற்று அரசினை உருவாக்க காங்கிரஸ் கட்சி, தன்னை விட குறைவான இடங்களைப் பெற்ற மதச்சார்பற்ற
ஜனதா தளத்தின் குமாரசாமி முதல்வராக ஆதரவளித்தது. குறைவான இடம் பெற்றவருக்கு அதிக இடம்
பெற்றவர் ஆதரவளிப்பதா என்று குய்யோமுய்யோ என்று பாஜக குதித்தது. ஜனநாயகக் கேடு என்றெல்லாம்
வர்ணித்தது.
காஷ்மீரில்
இரண்டு இடம் மட்டுமே பெற்ற கட்சிக்கு இருபத்தி ஐந்து இடம் பெற்ற கட்சி ஆதரவு அளிப்பது
ஜனநாயகக் கேடா இல்லை வேறு ஏதாவது கேடா?
கர்னாடகத்திற்கு
தவறு என்று சொல்லப்பட்டது காஷ்மீருக்கு மட்டும் எப்படி சரியானது?
இந்த
கேள்விகளுக்கெல்லாம் காவிகள் பதில் சொல்ல மாட்டார்கள்.
காவிகளின்
தேச பக்தி வேஷம் கூட இந்த பிரச்சினையில் கலைந்து போனது.
அதை
நாளை பார்ப்போம். . .
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅனாமதேயமா ஒளிஞ்சு நிக்கற கோழையெல்லாம் துணிச்சல் பற்றி பேசக்கூடாது. நீ உன் ஒரிஜினல் அடையாளத்தோட வா. உன்னோட பொறுக்கிக் கூட்டணியில் யாரெல்லாம் இருக்காங்கன்னு சொல்றேன்
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete