ஏன்?
எங்களின் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி திரு பா.இசக்கிராஜன் அவர்களின் முகநூல் பதிவை படியுங்கள். தெரியும்.
நானும் சில சந்தர்ப்பங்களில் அவசரமாக பயன்படுத்தியுள்ளேன். அதனை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
சில நாட்களுக்கு முன் எனது நண்பர் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க விரும்பினேன். முகநூலில் அவரது சுவற்றில் ஆங்கிலத்தில் சுருக்கமாக HBD என்று பதிவிட்டேன்.
உடனே நண்பரிடமிருந்து எனது உள் பெட்டிக்கு ஒரு தகவல் வந்தது. தகவல் என்ற சொல்வதைவிட ஓர் ஆலோசனை என்பதுதான் மிகச்சரியாக இருக்கும்.
HBD என்ற சுருக்க எழுத்துக்களுக்கு நல்லதாகவும்,
பொல்லாததாகவும் பல பொருள் இருக்கின்றன என்றும், எனவே முழுமையான சொற்களை பயன்படுத்துவது நல்லது என்றும்
கூறியிருந்தார்.
உடனே நான் அவரது சுவருக்குச்சென்று சுருக்கமான மூன்றெழுத்துக்களை அகற்றிவிட்டு HAPPY BIRTH DAY என்று மூன்று சொற்களை பதிவிட்டேன்.
நண்பரும் உடனே நன்றி என்று பதிவிட்டார்.
இதற்குப்பிறகு HBD என்றால் என்னென்ன விரிவாக்க சொற்கள் உள்ளன என்று Google செய்து பார்த்தேன்.
இருபத்தைந்து விரிவுபடுத்தப்பட்ட சொற்கள்
கிடைத்தன.
விரிவுபடுத்தப்பட்ட சொற்களுள் ஒன்று
Honoured By Death என்பதாகும்..
பயன்படுத்தும்போது இந்த மூன்றெழுத்து நமக்கு நல்லதாகத் தெரியும். நாம் பயன்படுத்தும் முறையால் வாழ்த்தினைப் பெறுபவர் மனம் வருந்தக்கூடாது.
இந்த தகவல் தெரிந்தபிறகு நான் நண்பர்களை
மூன்றெழுத்தால் மட்டும் வாழ்த்துவதில்லை. முழுமையான மூன்று வார்த்தைகளால் தான் வாழ்த்துகிறேன்.
நீங்களும் இந்த தகவலை தெரிந்துவைத்து நண்பர்களை சரியான முறையில் வாழ்த்த வேண்டுகிறேன்.
இந்த தகவலை என் கவனத்திற்கு நல்லபடி கொண்டுவந்து ஒளிகாட்டியது சென்னை வாழ் பாளையங்கோட்டை திரு அல்ஃபோன்ஸ் ராஜ் அண்ணாச்சி. இவர் தூய சவேரியார் உயர்நிலைப்பள்ளியில் எனக்கு கணிதம் கற்பித்த
திரு பீட்டர் ஃபிடலிஸ் ஐயா அவர்களின் இளைய சகோதரர்.
HBD என்று பயன்படுத்தும்போது அதற்குண்டான
விரிவான சொற்களின் பட்டியல் இதோ...
No comments:
Post a Comment