Thursday, November 1, 2018

நேற்று கறுப்புக்கொடி, இன்று சிலை திறப்பு - வெட்கக்கேடு


பாஜக எந்த அளவிற்கு மானங்கெட்ட, கேவலமான, சந்தர்ப்பவாத கட்சி என்பதை அம்பலப்படுத்துகிறார் பாஜகவின் துவக்க காலத்தலைவரும்  குஜராத்தில் முதலமைச்சராகவும்  இருந்த சங்கர்சிங் வகேலா . . .





அன்று படேலுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டியது இதே பாஜகவினர்தான்
ஓட்டுக்காக மோடி ஆடும் நாடகமே சிலைத் திறப்பு!






அகமதாபாத், அக்.30-

சர்தார் வல்லபாய் படேலின் சிலைத்திறப்பானது, தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக மோடிசெய்யும் தந்திரமே அன்றி வேறல்லஎன்று குஜராத் மாநில முன்னாள் முதல்வரும், பாஜக-வின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவருமான சங்கர் சிங் வகேலா சாடியுள்ளார்.“படேல் சிலையை ஒற்றுமையின் சிலை என்று கூறும் மோடி, முதலில் சிபிஐ-க்குள் ஒற்றுமையைக் கொண்டு வரட்டும்” என்றும் வகேலாவிளாசியுள்ளார்.குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில், உலகிலேயே மிகவும்உயரமான சிலை என்ற அறிவிப் போடு, 182 அடி உயரத்திற்கு சர்தார்வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் கோடி ரூபாய்செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்தசிலையை பிரதமர் மோடி புதன்கிழமையன்று திறந்து வைக்கிறார்.

இந்நிலையில், படேல் சிலைத் திறப்பு அரசியல் குறித்து, சங்கர் சிங்வகேலா கூறியிருப்பதாவது:பிரதமர் மோடி, சர்தார் வல்லபாய் படேலின் சிலைத் திறப்பில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார். மோடி முதல்வராக இருந்தபோது, அகமதாபாத் விமான நிலையம் அருகே அமைத்த படேல் நினைவுமண்டபத்திற்கு தற்போது வரைமோடி எத்தனை முறை சென்றிருக்கிறார்? படேல் சிலைத் திறப்பில் ஆர்வம் காட்டும் மோடி, அதே படேல் சமூகத்தைச் சேர்ந்த போராளியை (ஹர்திக் படேல்) சிறையிலிருந்து விடுவிக்க என்ன நடவடிக்கை எடுத்தார்?

வல்லபாய் படேல் இந்தியாவை ஒருங்கிணைத்தவர் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும்இல்லை. ஆனால், மோடி அடிக்கடிபட்டேலுக்கு அநீதி நடந்துள்ளதாக தெரிவித்து வருகிறார். நான் பட்டேல் மகளைச் சந்தித்துள்ளேன். அவர் எப்போதும் தனது தந்தைக்கு அநீதிஇழைக்கப்பட்டுள்ளதாக ஒருமுறைகூட என்னிடம் தெரிவித்தது இல்லை. நான் முதல்வராக இருந்தபோது, அகமதாபாத் விமான நிலையத்தை, சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையம் என்று பெயர் மாற்றினேன். அதற்காக எனக்கு கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியவர்கள் இதே பாஜக-வினர்தான், என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

குஜராத் மாநிலம் தற்போது 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் படேலுக்கு சிலை அமைக்க 3 ஆயிரம் கோடி ரூபாய்செலவு செய்வது வீணான செயலாகும். 

படேல் மீது மோடிக்கு இந்த திடீர்பாசம் எவ்வாறு ஏற்பட்டது; இதற்குமுன்பு எத்தனை முறை பட்டேலின்பெயரை மோடி உச்சரித்திருக்கிறார்? ஆனால், இப்போது பட்டேல் மீதுபாசம் ஏற்படுகிறது என்றால், அதுதேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கு பாஜக செய்யும் தந்திரம் அன்றிவேறல்ல.படேலின் சிலையை ஒற்றுமையின் சிலை என்று பிரதமர் மோடிகுறிப்பிட்டுள்ளார். 

ஒற்றுமையின்சிலை ஒருபுறம் இருக்கட்டும்; முடிந்தால் சிபிஐ அமைப்புக்குள் ஒற்றுமையைக் கொண்டு வருவதற்கு மோடி பாடுபடட்டும். ரிசர்வ் வங்கியிலும் ஒற்றுமையின்மை நிலவி வருகிறது. அதையும் சரிசெய் வதற்கு மோடி ஆர்வம் காட்டட்டும்.இவ்வாறு சங்கர் சிங் வகேலா கூறியுள்ளார்

நன்றி -தீக்கதிர் 31.10.2018 

No comments:

Post a Comment