Friday, November 2, 2018

இவ்வளவுதாங்க வாழ்க்கை . . .


மேலே உள்ள விளம்பரத்தை காலையில் தீக்கதிரை படிக்கும் போது பார்த்தேன்.

இப்போது முகநூல் சென்றால் தீக்கதிர் புகைப்படக்காரர் தோழர் ஜாபரின் பதிவில் தோழர் விஜயகுமார் இன்று மதியம் சாலை விபத்தில் இறந்து விட்டார் என்ற செய்தி உள்ளது. தோழர் விஜயகுமார் அவர்களுக்கு அஞ்சலி. 

தோழர் விஜயகுமார் எனக்கு பழக்கம் இல்லாதவர்தான். ஆனாலும் மனது வலிக்கிறது. மாலை பாராட்டு விழா நடைபெற வேண்டிய சூழலில் மதியம் அகால மரணம் அடைவது என்பது எவ்வளவு பெரிய கொடுமை!

இதுதான் வாழ்க்கை. . .
இவ்வளவுதான் வாழ்க்கை. . . 
எதிர்பாராததுதான் வாழ்க்கை . . . .

இருக்கும் காலத்தை உருப்படியாக செலவழிப்போம்.
முடிந்தவரை அடுத்தவருக்கு நல்லது செய்ய முயற்சிப்போம்.
அது முடியாவிட்டால் கெட்டதாவது செய்யாமல் இருப்போம்.

5 comments:

  1. //இருக்கும் காலத்தை உருப்படியாக செலவழிப்போம்.
    முடிந்தவரை அடுத்தவருக்கு நல்லது செய்ய முயற்சிப்போம்.
    அது முடியாவிட்டால் கெட்டதாவது செய்யாமல் இருப்போம்.//

    மிகவும் சரியான வார்த்தைகள்

    ReplyDelete
  2. இது யாருக்கோ மறைமுகமா சொல்ற சேதி போல தெரியுதே

    ReplyDelete
  3. Yeah! Any hidden agenda?

    ReplyDelete
  4. இதில் என்ன மறைமுக செய்தியும் ஹிட்டன் அஜெண்டாவும் இருக்கு?
    வாழ்க்கையில் யாருக்கும், எனக்குமே எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
    முடிஞ்சா உதவி செய். இல்லைன்னா கெட்டதாவது செய்யாதே.
    இந்த வெளிப்படையான செய்து அனானிங்களை ஏன் உறுத்துது/
    சீரியல் வில்லிகளை போல அடுத்தவங்களை எப்படி கெடுக்கலாம்னு எப்பவும் திட்டம் போடற ஆட்களா?

    ReplyDelete
  5. "அது முடியாவிட்டால் கெட்டதாவது செய்யாமல் இருப்போம்."

    CC to சங்கீஸ் & முல்லாஸ்

    ReplyDelete