Thursday, November 1, 2018

பாகுபலின்னு மோடிக்கு நினைப்பு



கீழே உள்ள படத்தைத்தான் இன்று பெரும்பாலான பத்திரிக்கைகளில் பிரசுரித்திருந்தார்கள். சங்கிகள் பலரும் கூட பகிர்ந்து கொண்ட படமும் கூட இதுதான்.


என்ன இருக்கிறது இந்த படத்தில் புரியாதவர்களுக்காகத்தான் கோடு போட்டுக் காண்பித்துள்ளேன். 182 மீட்டர் படேல் சிலையை விட இந்த படத்தில் மோடியின் உயரம் அதிகம்.

அதாவது படேலை விட மோடி உயர்ந்தவர் என்று சொல்லாமல் சொல்லத் தூண்டுகிறது இந்த புகைப்படம். கேமரா ஆங்கிளில் மோடியை அடித்துக் கொள்ள யாருமில்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

பல்வாள்தேவன் சிலையை விட மகிழ்மதி மக்கள் மனதில் பாகுபலி உயர்ந்து நிற்பதாக பாகுபலி 1 திரைப்படத்தின் இடைவேளிக் காட்சி வரும். அது போல மோடி நினைத்து விட்டார் போல.

"நினைப்புதான் பொழப்பை கெடுக்குமாம்" என்று நீங்கள் மோடியை திட்டுவது என் காதிலும் விழத்தான் செய்கிறது. 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete