போன வார ஞாயிற்றுக்கிழமை அன்று மனைவியின் சுவையான சமையலை ஒரு கட்டு கட்டி விட்டு ஒரு புத்தகத்தை கையில் எடுத்தால் தூக்கம் கண்ணை தழுவியது. தூங்கலாம் என்று பார்த்தால் தூக்கம் ஏனோ வரவில்லை. கணிணி முன்பு அமரவோ, தொலைக்காட்சி பார்க்கவோ மூடு இல்லாததால் செய்த இனிப்பு இது.
இருநூறு கிராம் பொட்டுக்கடலையை ஒரு ஐந்து நிமிடம் வறுத்து அது ஆறிய பின்பு அதே அளவு சர்க்கரையையும் கொஞ்சமாய் ஏலக்காய் பொடியையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
பிறகு முந்திரியை உடைத்து ஒரு நாலு ஸ்பூன் நெய்யில் வறுத்து நெய்யோடு பொடித்த மாவில் விட்டு கலந்து அப்படியே உருண்டையாக பிடிக்கவும். கை கொஞ்சம் சுடும். அதற்கும் தயாராக இருக்கவும்.
டேஸ்டியான மாலாடு ஸ்பீடாகவே தயார் செய்யலாம்.
இது சீப்பும் கூட.
மேலே சொன்ன அளவிற்கு எனக்கு இருபத்தி இரண்டு உருண்டைகள் வந்தது. இதே அளவு மாலாடு, சரவணபவனிலோ அல்லது அடையார் ஆனந்தபவனிலோ ஒரு லட்டு பதினைந்து ரூபாய்.
எனக்கான செலவு என்பது கிட்டத்தட்ட எழுபத்தி ஐந்து ரூபாய். ஒரு மாலாட்டிற்கான செலவு கிட்டத்தட்ட மூன்று ரூபாய் ஐம்பது பைசா.
நான் மிச்சம் செய்தது இருநூற்றி ஐம்பத்தி மூன்று ரூபாய்.
கைவசம் நிறைய கலைகள் கற்று வைத்து இருக்கின்றீர்கள். கேரட் அல்வா,
ReplyDeleteமாலாடு
தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள் நண்பரே
ReplyDelete