மேலே
உள்ள புள்ளி விபரம் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை குறித்தது.
இடதுசாரிகளின்
ஆதரவோடு ஆட்சி நடைபெற்ற ஐக்கிய முன்னணி காலத்திலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்
முதல் காலத்திலும்தான் பங்கு விற்பனை என்பது கட்டுப் படுத்தப்பட்டு இருந்திருக்கிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சியில் நடந்த விற்பனை என்பது கூட இடதுசாரிகள், ஆட்சிக்கு அளித்த ஆதரவை திரும்பப்
பெற்ற பின் நிகழ்ந்ததுதான்.
காங்கிரஸ்
ஆட்சியில் நடந்தது எல்லாம் தவறுதான் என்று இன்றுவரை சொல்லிக் கொண்டிருக்கும் மோடி,
யு.பி.ஏ ஆட்சிக்காலத்தில் செய்த தவறை இரட்டிப்பாக ஏன் அதற்கு அதிகமாகவே செய்துள்ளது.
99,367
கோடி ரூபாய்க்கு அவர்கள் ஐந்தாண்டுகளில் பொதுத்துறை பங்குகளை விற்றார்கள் என்றால்,
இவர்களோ நான்கரை ஆண்டுகளில் 2,09,000 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார்கள்.
பொதுத்துறை
பங்குகளை விற்பதன் மூலம் இந்தியா இழப்பது எவற்றை எல்லாம்?
பொதுத்துறை
நிறுவனங்களின் மீதான நிர்வாகக் கட்டுப்பாட்டை இழக்கிறார்கள்.
பொதுத்துறை
நிறுவனங்கள் உருவாக்கியுள்ள சொத்துக்கள் மீதான கட்டுப்பாட்டை இழக்கிறார்கள். (குறிப்பாக
ரியல் எஸ்டேட் சொத்துக்களின் மதிப்பு என்பது கணக்குப் புத்தகங்களில் சொல்லப் படுவதை விட உண்மை மதிப்பு எப்போதுமே பல
மடங்கு அதிகம்)
பொதுத்துறை
நிறுவனங்கள் உருவாக்கும் வேலை வாய்ப்புக்களை இழக்கிறார்கள்.
வேலை
வாய்ப்புக்கள் அளிக்கும் இட ஒதுக்கீடு வழங்குகிற சமூக நீதியை இழக்கிறார்கள்.
பொதுத்துறை
நிறுவனங்கள் ஈட்டுகிற லாபத்தை பெறுவதை இழக்கிறார்கள்.
பொதுத்துறை
நிறுவனங்கள் மட்டுமே ஆற்றக் கூடிய சமூகத்திற்கான, பொருளாதாரத்திற்கான பங்களிப்பை இழக்கிறார்கள்.
பொதுத்துறை
நிறுவனங்களால் மட்டுமே தர முடிகிற பாதுகாப்பை இழக்கிறார்கள்.
எப்படிப்பட்ட
வறுமை வந்தாலும் பட்டினியில் உயிரே போகிற சூழல் வந்தாலும் விதை நெல்லை எந்த ஒரு விவசாயியும்
அடுத்த சாகுபடிக்காக சேமித்து வைப்பார்களே தவிர
அந்த நிமிட வறுமைக்காக அதை எக்காலத்திலும் பயன்படுத்த மாட்டார்கள்.
பொதுத்துறை
நிறுவனங்கள் விதை நெல்லைப் போன்றது. அதனை அத்தியாவசியத்திற்காகக் கூட அல்ல, ஆட்சியாளர்களின்
ஆடம்பர செலவினங்களுக்காக விற்பதைப் போன்ற மூடத்தனம் ஏதுமில்லை.
மோடி
அரசு என்றால் மூட அரசு என்றுதானே அர்த்தம்!
No comments:
Post a Comment