ஜெமோவை
எதிர்ப்பது அவரது திமிருக்காகவே . . .
தான்
மிகக் கடுமையாக ஒன்றரை மாதம் உழைப்பைக் கொட்டியதாகவும் நான்கு வெண் முரசுக்கான உழைப்பைச்
செலுத்தியதாகவும் ஜெமோ பீற்றிக் கொள்ளாமல் இருந்திருந்தால் “சர்கார்” திருட்டுக்கதை
என்று முருகதாஸ் ஒப்புக் கொண்ட போது யாரும் அவரை கண்டு கொண்டிருக்க மாட்டார்கள்.
“நான்
ரொம்ப ஸ்டெடி” என்று காண்பித்துக் கொண்டாலும் அண்ணன் பேஸ்மெண்ட் ரொம்ப வீக் என்பதை
அவருடைய நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட புலம்பல் காண்பித்துக் கொடுத்து விடுகிறது.
அந்த
புலம்பலிலும் தனது வழக்கமான திமிரை அவர் காண்பிக்காமல் இல்லை.
முழு
கட்டுரையும் வெளியிட்டு உங்களை சோதிக்கப் போவதில்லை. நான் பெற்ற துன்பம் இவ்வையகம்
பெறக் கூடாது என்ற நல்லெண்ணம்தான்.
கீழே
நீல வண்ணத்தில் உள்ளது நீண்ண்ண்ண்ட புலம்பலின் ஒரு பகுதி.
இரண்டு
நாட்களுக்கு முன் அஜிதன் கூப்பிட்டிருந்தான் “இண்டநெட் பக்கம் போயிராதே. மொட்டை வசை,
அவதூறு, கிண்டல். நேரிலே சிக்கினா விஷம் வச்சே கொன்னிருவாங்க. அவ்ளவு வெறுப்பு” என்றான். (பாவம் ஜெமோவின் வாரிசும் ஜெமோ மாதிரியே அவருடைய வார்த்தைகளான மொட்டை வசை, விஷம் வச்சு கொன்னிருவாங்க என்று பயன்படுத்துகின்றார்.) “ஓ” என்றேன். “எதுக்கு இவ்ளவு வெறுக்கிறாங்க?” என்றான். “இது ஒரு சின்ன வட்டம்தான்.
பெரும்பாலும் சின்ன எழுத்தாளர்கள். சினிமா சான்ஸ் தேடுறவங்க. அவங்களுக்கு இது ஒரு பத்துநாள்
கொண்டாட்டம்” (ஓ! இவரு பெரிய அப்பாடக்கரு, மத்தவங்க எல்லாம் தம்மாத்தூண்டு பசங்க! நினைப்புதான் பிழைப்பை கெடுக்குமாம்) என்றேன்.
“என்ன
சார் இது, மொத்த தமிழ் சினிமாவும் நீங்க இலக்கியத்திலே உருவாக்கியிருக்கிற கதையுலகுக்கு
நூத்துலே ஒண்ணு வராது.(தட்டுங்க, தட்டுங்க, நல்லாவே ஜால்ரா தட்டுங்க, இந்த மாதிரி ஆளுங்கதான் அந்தாளை உசுப்பேத்தி விடறாங்க) சர்க்காருக்கு கதையும் நீங்க கிடையாது, எங்கியும் அந்தப்பேச்சு
இல்ல. ஆனா நீங்களே கதைய திருடிட்ட மாதிரி ஒரு கும்பல் இண்டர்நெட்டுலே திரிச்சுப்பேசிக் கூச்சலிடுது”
என்றார் வாசக நண்பர். “செய்யட்டும்… அதன் வழியா அவங்களும் இருக்காங்கன்னு அவங்களுக்கே
காட்டிக்கிடறாங்க” என்றேன்
கிட்டத்தட்ட
தீய நோய்களை மனித உருவாக ஆக்கி எரித்துக்கொண்டாடும் மனநிலை.
நாற்பத்தைந்து
நாள் குடித்துக் கூத்தாடிவிட்டு கதை எழுதியதாகச் சொல்கிறேன் என ஓர் உடன்பிறப்பு ஆணித்தரமாக
ஐயப்படுகிறார்.
இன்னொரு
பெரியாரியப் பிழம்பு வெண்முரசு ஒரு திருட்டுக்கதை என கண்டுபிடித்துவிட்டார்!
ஆம், மகாபாரதத்தில் இருந்து திருடியது. ஏராளமான சான்றுகளை வேறு அளிக்கிறார்.
அந்த
வசைகளில் இந்துத்துவ, சாதியக் கோஷ்டிகளும் [பல்வேறு புனைபெயர்களுடன்] பிறருடன் கைகோத்துக்கொண்டு
ஈடுபட்டு கொண்டாடுகின்றன..
உண்மையில்
இந்த வசைகள் எனக்கு நன்மையையே செய்கின்றன. இத்தகைய வசைகளின் அலை முன்னரும் வந்துள்ளது.
அதிலுள்ள மிதமிஞ்சிய மூர்க்கம், எந்த நியாயத்துக்கும் கட்டுப்படாத வெறி ஒரு சாராரை
மகிழச்செய்யும்.
ஒவ்வொரு
வசைமழைக்குப்பின்னரும் எனக்கு புதிய வாசகர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களே உண்மையில்
வாசகர்கள், மற்றவர்கள் எப்போதும் எதையும் வாசிக்கப்போவதில்லை.
இந்த
வசைகளையே பாருங்கள். மேலே சொன்ன மொக்கைகள் எவரும் என்னையோ என் எழுத்தையோ கேள்விப்பட்டதுகூட
இல்லை. வேறு சிலருக்கு ஒற்றைவரிகள் தெரியும்.
எஞ்சிய
பெருங்கும்பல் நவம்பர் இறுதிக்குள் என்பெயரை மறந்து ‘ஜெயகுமாரோ எவனோ ஒருத்தன் என்னமோ
சினிமாவிலே ஏதோ எழுதினான்ல, யார்ரா அவன் மச்சி?” “ஆமாடா, சர்க்கார் படத்திலே
பத்மஸ்ரீங்கிற குட்டிக்கும் இவனுக்கும் என்னமோ பிரச்சினைன்னு சொன்னாங்க” என்ற டெம்ப்ளேட்டில்
உலவிக்கொண்டிருப்பார்கள்.
அவர்களுக்கு
என வேறு அறிவுச் செயல்பாடு ஏதுமில்லை.
நான்
நேரில்கண்ட, நன்கறிந்த ஒன்றை அதற்குரிய தருணத்தில் சொல்லாமலிருப்பது அறமல்ல என
எனக்குப் பட்டது. அதிலும் அவர் சூழப்பட்டு தாக்கப்படுகையில், அவருடைய பேட்டியில் அவர்
துயரத்துடன் கண்ணீர் மல்க அதைச் சொன்னதைக் கேட்டபின்னர், உடன்நிற்பதே என் கடமை என எண்ணினேன்.
அத்தகைய தருணங்களில் தந்திர மௌனம் என் இயல்பல்ல.
ஏற்கனவே
லீனா மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்து குறிப்பு எழுதியபோதும் என் நிலைபாடு இதுவே. இதன்பொருட்டு
வசைபாடப்படுவேன் என தெரியும்.
எந்நிலையிலும் எவ்விழப்பிலும் இறுதிவரை உடனிருப்பதே
என் அறம்.இந்த ஐம்பத்தாறாண்டுகளில் அப்படித்தான் இருந்திருக்கிறேன், இனியும் அப்படித்தான்.
இத்தகைய
ஒரு அவதூறு அல்லது வசை வருகையில் என் நேர்மைமேல் நம்பிக்கை கொண்டவர்களே என் நண்பர்களாக
இருக்கமுடியும். அந்நம்பிக்கை இல்லாதவர்கள் தாங்களாகவே என் நட்பிலிருந்து முற்றாக விலகிச்செல்வதே அவர்களின் நேர்மைக்கான அடையாளமாக
இருக்கும் என்றே நான் எண்ணுவேன். எவ்வகையிலும் அவர்களை எனக்கு அணுக்கமாக வைத்துக் கொள்ளமாட்டேன்.
தமிழுக்கென்று
எழுத்துரு (FONT) அவசியமில்லை. ஆங்கில எழுத்துருவையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழை
நாசமாக்கும் ஆலோசனையை (அதாவது தமிழில் அம்மா என்று எழுதாமல் AMMA) சொன்ன நாள் முதல் நான்
தொடர்ந்து ஜெமோவை விமர்சித்து வருபவன்.
மோசடிப்
பேர்வழி விஜய் மல்லய்யாவிற்கு தோற்றுப் போன தொழில் முனைவர் என்று முட்டு கொடுத்த போது.
உடல்
நலன் பாதிக்கப்பட்ட வங்கியில் பணியாற்றும் பெண் ஊழியரை “கழுத்தை பிடித்து வெளியே தள்ள
வேண்டும்” என்று இழிவு படுத்திய போது.
தமுஎகச
வைச்சேர்ந்த எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர்களை எழுதத் தெரியாதவர்கள் என்று முத்திரை குத்திய போது,
தம்பிடிக்கு
பிரயோசனமில்லாத செல்லா நோட்டு விவகாரத்தில் மோடிக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு
அபத்தமாக உளறிய போது,
நிலத்தை
அபகரித்து ஆதியோகி சிலை வைத்த ஜக்கியை நியாயப் படுத்திய போது
செல்லா
நோட்டு விவகாரத்தின் தோல்விக்கு அதிகாரிகளே காரணம் என்று புது வியாக்யானம் கொடுத்த
போது
கீழடி
விவகாரத்தில் தொல்லியல் நிபுணர்கள் தவிர வேறு யாரும் வாய் திறக்கக் கூடாது என்று திசை
திருப்பிய போது
என
அவர் மீண்டும் மீண்டும் தம்படித்துக் கொள்கிற “அறம்” என்பதை ராஜாவின் ஹைகோர்ட் போல
மதிக்கிறபோதெல்லாம் நான் அவரை விமர்சித்து எழுதியுள்ளேன்.
இந்த
மனிதனுக்கும் அறத்திற்கும் எந்த சம்பதமும் கிடையாது என்பதற்கு கீழே உள்ள ஒரு வரி போதும்
அந்த
வசைகளில் இந்துத்துவ, சாதியக் கோஷ்டிகளும் [பல்வேறு புனைபெயர்களுடன்] பிறருடன் கைகோத்துக்கொண்டு
ஈடுபட்டு கொண்டாடுகின்றன..
இந்துத்துவ
கோஷ்டியின் எழுத்துலகப் பிரதிநிதியே இவர்தான் என்பதை எப்படி லாவகமாக மறைக்கிறார் பாருங்கள்!
“ கிட்டத்தட்ட
தீய நோய்களை மனித உருவாக ஆக்கி எரித்துக்கொண்டாடும் மனநிலை” என்று திமிரோடு சொல்கிறாரே,
அந்த திமிரால்தான் அவர் எதிர்க்கப்படுகிறார். ஆணவம் தலைக்கேறி அவர் எழுதுகையில் அதற்கு எதிர்வினை ஆற்றாமல் இருக்க மற்றவர்கள் என்ன இவரது அடிமைகளா?
இவரை விட பெரிய எழுத்தாளர்கள் ஏராளமாக இருக்கையில் இவர் மட்டும் எதிர்க்கப்படுவதற்கு இவரது ஆணவமும் திமிரும் உடலிலும் மனதிலும் எழுத்திலும் ஊறியிருக்கிற விஷம் மட்டுமே காரணம்.
இந்த
உண்மையைக் கூட புரிந்து கொள்ள முடியாத இவரெல்லாம் ஒரு எழுத்தாளர்?
புலம்பலின் ஒரு பகுதியே இவ்லோன்னா, மொத்தமா எவ்லோ இருக்கும்?
ReplyDeleteமுடியாதுடா சாமி
அறம் கிழிந்து தொங்குது..
ReplyDelete