காவிகளுக்கு
தாங்கள் பெரிய தேச பக்தர்கள் என்று எப்பவுமே ஒரு நினைப்பு இருக்கும்.
தேசம்
என்றால் என்ன?
தேச
பக்தி என்றால் என்ன?
தேசத்தின்
சொத்துக்கள் எது?
தேசத்தின்
சொத்துக்களை யாருக்கு எப்படி பகிர்ந்தளிப்பது?
தேசத்தின்
சொத்துக்களை எப்படி பாதுகாப்பது?
தேசத்தின்
சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யார்?
தேசத்தின்
சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தது யார்?
தேசத்தின்
இறையாண்மை என்றால் என்ன?
தேசத்தின்
இறையாண்மையை காப்பதென்றால் என்ன?
இப்படி
வரிசையாக கேள்விகளை எழுப்பினால் பதில் சொல்ல முடியாமல் காவிகள் ஓடி விடுவார்கள். ஏனென்றால்
அவர்களுக்கே நன்றாகத் தெரியும், மேலேயுள்ள கேள்விகளின் அடிப்படையில் அவர்களை விட மிகப்
பெரிய தேசத்துரோகிகள் யாரும் கிடையாதென்று.
ஆனாலும் மூளைச்சலவை செய்யப்பட்ட விஷயங்களை மட்டுமே வாந்தி
எடுக்கிற சில பீட்டர் விடும் அனாமதேயங்கள், தங்களை பெரிய தேச பக்தர்கள் என்று பீற்றிக்
கொண்டிருக்கும்.
அவர்கள்
மண்டையில் உறைப்பதற்காக ஒரு உண்மையை சொல்ல வேண்டும்.
திரிபுராவில்
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ க்களை திரிணாமுல் காங்கிரஸ் விலைக்கு வாங்கியது. அவர்களை
பாஜக அப்படியே ஹோல்சேல் ரேட் போட்டு கொள்முதல் செய்து கொண்டது. காங்கிரஸ் நரி பாஜக
பரியான திருவிளையாடல் புராணம் மட்டும் வெற்றி பெற போதாது என்பதால் அங்கே உள்ள ஒரு லோக்கல்
கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டது.
அது
எந்த கட்சி தெரியுமா?
அந்த
கட்சியின் கொள்கையும் கோரிக்கையும் என்ன தெரியுமா?
அந்த
கட்சியின் பெயர் IPFT (Indigenous People Front of Tripura)
இந்தியாவிலிருந்து
திரிபுராவை தனி நாடாக பிரிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கொள்கை, கோரிக்கை, கோட்பாடு
எல்லாமே.
இந்தியாவை
துண்டாட வேண்டும் என்று வெளிப்படையாக சொல்கிற கட்சியோடு, வன்முறைக் கலவரங்களை நடத்துகிற
ஒரு கட்சியோடு வாக்குகளுக்காக கூட்டணி வைக்கிற பாரதீய ஜனதா கட்சி தேச பக்த கட்சியா?
சொல்லுங்க
காவிஸ், சொல்லுங்க . . .
திரிபுராவில
நீங்க முதலமைச்சராக பிரிவினை கோரும் கட்சியோடு கூட்டு வச்சீங்க.
ஆனால்
ஜம்மு
காஷ்மீரிலோ
சுதந்திர
காஷ்மீரை கோரும் சஜ்ஜத் லோனை முதலமைச்சராக்கவே தயாராகிட்டாங்க!
IPFT
யும் சரி, மக்கள் மாநாட்டுக் கட்சியும் சரி, பாஜக வரையறைப்படியே பிரிவினைவாத கட்சிகள்,
தீவிரவாதக் கட்சிகள்.
நாற்காலிக்காக
அவர்களோடு கூட்டணி வைக்கும் பாஜகவினர்தான் தேசபக்தர்களாம்.
நல்லா
காமெடி பண்றாங்கடா . . . .
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete