இந்தியாவின்
முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை நாடு குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறது.
நாங்கள் பொதுத்துறை பாதுகாப்பு தினமாகவும் அனுசரிக்கிறோம்.
சிலர்
சொன்ன சில வாசகங்களுக்கு வரலாற்றில் இடமுண்டு.
பகத்சிங்கின்
“இன்குலாப் முழக்கம்”
கோட்சேவின்
தோட்டாவுக்கு இரையான தருணத்தில் மகாத்மா காந்தி சொன்ன “ஹே ராம்”
பாடிஸ்டாவின்
நீதிமன்றத்தில் தன் மீதான குற்றங்களை மறுத்து வாதாடி “வரலாறு என்னை விடுதலை செய்யும்”
என்று நிறைவு செய்த ஃபிடல் கேஸ்ட்ரோ
ஆகிய
வாசகங்கள் போலவே
ஜவஹர்லால்
நேரு கூறிய “பொதுத்துறை நிறுவனங்கள் இந்திய தேசத்தின் திருக்கோயில்கள்” என்ற வாசகத்திற்கும்
வரலாற்றில் முக்கிய இடமுண்டு.
இந்தியப் பொருளாதாரத்தை
சுயசார்புத்தன்மையுடன் வளர்த்தெடுக்க, அடிப்படைக் கட்டுமான வசதிகளை உருவாக்கிட, பொருளாதார
வளர்ச்சியை அனைவருக்கும் பகிர்ந்தளித்திட, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திட, சமூக நீதியை
நிலை நாட்டிட பொதுத்துறை நிறுவனங்களால் மட்டுமே சாத்தியம் என்பதை அவர் உணர்ந்ததால்தான்
அவ்வாறு கூறினார். இக்கருத்தோட்டத்தின் பின்னணியில்தான் எல்.ஐ.சி உள்ளிட்ட நிறுவனங்கள்
உதயமானது
ஆனால் இன்றைய நிலை என்ன? இன்றைய
ஆட்சியாளர்கள் இந்தியாவின் செல்வாதாரங்கள் அனைத்தையும் உள்நாட்டு, பன்னாட்டு பெரு
நிறுவனங்களுக்கு தாரை வார்த்துத் தரும் தரகர்களாக மாறி விட்டனர். பொதுத்துறை பொது
இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கான கதவுகளை திறந்து வைத்துள்ளது மத்தியரசு. ஏற்கனவே
ஜி.ஐ.சி ரீ மற்றும் நியூ இந்தியா நிறுவனங்களின் பத்து சதவிகித பங்குகள்
விற்கப்பட்டு விட்டன.
எல்.ஐ.சி நிறுவனத்தின் மீது
பிணந்தின்னி கழுகுகளின் பார்வை ஏற்கனவே விழுந்து விட்டது. உதிரி உதிரியாக மற்ற
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பிரிப்பதற்குப் பதிலாக எல்.ஐ.சி யின் பங்குகளை
விற்று விடலாமே என்று சில பெரு முதலாளிகள் இலவச ஆலோசனைகளை அள்ளி வழங்கிக் கொண்டே
உள்ளார்கள். “எல்.ஐ.சி மட்டும் பங்குச் சந்தையில்
இணைக்கப்பட்டிருந்தால்” என்று நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி பெருமூச்சு விட்டதை
நம்மால் மறந்து விட முடியுமா என்ன?
இந்த சீரழிவு நவீன தாராளமயமாக்கல்
கொள்கைகளை அமலாக்கத் தொடங்கிய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் ஆரம்பமானது.
ஆனால் அது மிக மோசமாக
அமலாக்கப்பட்டது “தவறான கட்சியில் சரியான மனிதர்” என்று வர்ணிக்கப்பட்ட வாஜ்பாய்
காலத்தில்தான். “ஸ்ட்ரஜிக் சேல்” என்ற அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்களை
அடிமாட்டு விலைக்கு விற்ற அவலம் வாஜ்பாய் ஆட்சியில்தான் நடந்தது. பொதுத்துறை
நிறுவனங்களை விற்பதற்கென்றே ஒரு அமைச்சரையே வைத்திருந்தார் வாஜ்பாய். இந்த கேடு
கெட்ட ஆட்சியில் “இந்தியா ஒளிர்கிறது” என்று வெற்று ஜம்பம் வேறு.
இடதுசாரிகளின் உதவியோடு
மன்மோகன்சிங் ஆட்சி நடத்திய காலத்தில்தான் இந்த போக்கு தடைபட்டது. ஏனென்றால் அதனை
குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் ஒரு நிபந்தனையாக இணைத்த பெருமை இடதுசாரிகளையே
சாரும்.
மோடியின் ஆட்சிக் காலத்தில் நிலைமை
மிகவும் மோசமாக மாறி விட்டது. பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்று செலவுக்கு
பயன்படுத்துகிறது. பட்ஜெட்டிலேயே பங்கு விற்பனை மூலம் வரும் தொகையும்
கணக்கிடப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களை முற்றிலுமாக அழித்து விட வேண்டும் என்ற
வெறி கொண்டு அலைகிற ஆட்சி மோடி ஆட்சி.
மசூதியை இடித்த கூட்டம் இது என்பது
அனைவருக்கும் தெரியும். ஆனால் தேசத்தின் திருக்கோயில்கள் என்று நேருவால் வர்ணிக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களையும் இடிக்கிற கூட்டமும் இதுதான் என்பதுதான் பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை.
அதனால்தான் கீழே உள்ள பிரசுரத்தை மக்களிடம் இன்று கொண்டு சேர்த்துள்ளோம்.
எல்.ஐ.சி யையும் பொதுத்துறை நிறுவனங்களையும் காக்கும் பணி என்றென்றும் தொடரும் . . .
எல்.ஐ.சி யையும் பொதுத்துறை நிறுவனங்களையும் காக்கும் பணி என்றென்றும் தொடரும் ***** nothing is safe under the evil clutches of communists. In the name of union, thugs rule, demand unreasonable wage raise and bonus without performing any useful work in the organization and also encourage indiscipline, unrest and intimidate to strike, eventually closing industries and business. Most of public sector units are inefficient and under loss because of these gangs. Such disruptive and self-serving comrades are dangerous. India is better of without such satans.
ReplyDeleteஎன்னடா நாயே, புதுசா ஒரு வார்த்தை கத்துக்குடுத்துருக்காங்க போல. சாத்தான் என்பது கிறிஸ்துவர்கள் பயன் படுத்தும் வார்த்தையாயிற்றே! தீட்டு பட்டுடாதா? பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டம் என்றால் அதை ஏண்டா நாயே, தனியார் முதலாளிகள் வாங்க துடிக்கிறாங்க! நாங்க கஷ்டப்பட்டு உருவாக்குவோம். நீங்க எலும்புத்துண்டை பொறுக்கித் தின்ன வித்துட்டு போவீங்க! சரி பொதுத்துறை நிறுவனங்கள் வேண்டாம்னா என்ன எச்.ராசாவுக்கு சிலை வைக்க அவங்க கிட்ட காசு கேட்டீங்க?
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete