Wednesday, November 21, 2018

காஷ்மீரை ஒழிக்காம விட மாட்டானுங்க . . .


ஜம்மு காஷ்மீரில் ஒரு பொருந்தா கூட்டணி கடந்த ஜூன் மாதமே முறிந்து போனது. மெகபூபா ராஜினாமா செய்தாலும் அம்மாநில சட்டப் பேரவையை மத்தியரசு கலைக்கவில்லை.

அதற்கு என்ன காரணம்?

மெகபூபா கட்சி, ஓமர் அப்துல்லா கட்சி,  காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளை உடைத்து பாஜக ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதுதான்.

அதற்கு ஏற்றார் போல மெகபூபா கட்சியில் சிலரை வளைக்கவும் முயற்சி செய்தார்கள். அவர்கள் கட்சிக்குள் குட்டி கலாட்டா செய்தாலும் வெளியே வரவில்லை.

பாஜகவின் அகராதிப் படி பிரிவினைவாதக் கட்சி, பயங்கரவாதக் கட்சி என்று சொல்லப்படுகிற காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த சஜத் லோன் என்பவரை முதல்வராக்க முடிவு செய்தது பாஜக. அக்கட்சிக்கு சஜத் லோன் தவிர இன்னும் ஒரே ஒரு எம்.எல்.ஏ தான் உண்டு.

(இங்கே பாஜகவின் போலித்தனம் பற்றி குறிப்பிட வேண்டிய இரண்டு விஷயங்களை நாளை தனி பதிவாக எழுதுகிறேன)

இச்சூழலில் பாஜகவின் முயற்சியை முறியடிக்க மெகபூபா கட்சி, ஓமர் அப்துல்லா கட்சி,  காங்கிரஸ் கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்து ஆளுனருக்கு கடிதம் அனுப்ப

அரண்டு போன ஆளுனர்

ஐந்து மாதமாக முடக்கப்பட்டிருந்த சட்டசபையை உடனடியாக கலைத்து விட்டார். 

மெகபூபா கட்சி, ஓமர் அப்துல்லா கட்சி,  காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் ஒன்றாக அரசு அமைப்பது கூட பொருந்தா கூட்டணியாக தோன்றலாம். ஆனால் பாஜகவின் அராஜகத்தை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தேவை இன்று உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

குதிரை பேரம் வெற்றி பெறாத சூழலில் காஷ்மீர் சட்டப் பேரவையைக் கலைத்து

அம்மாநில மக்களின் நம்பிக்கையை மீண்டும் இழந்துள்ளது இந்திய அரசு.

காஷ்மீரில் அமைதி நிலவ உடனடியான தேவை அம்மாநில மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மத்தியரசு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து நான் எழுதி வருகிறேன். 

ஆனால் எதிர்மறையாகவே மத்தியரசு செயல்படுகிறது.

அவர்களுக்கு காஷ்மீர் மண்ணில் அமைதி முக்கியமில்லை.
காஷ்மீர் மண்ணை முதலாளிகளுக்கு வழங்குவதில் உள்ள சட்டபூர்வ தடைகளை நீக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

ஏனென்றால்
மோடி பிரதமர் இல்லை.
தரகர்

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete