ஐந்து கோடி ரூபாய் மூலதனம் போட்ட இந்திய அரசுக்கு எல்.ஐ.சி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தன் லாபத்தில் 95 % ஐ பாலிசிதாரருக்கு ஒதுக்கி வைத்து மீதம் ஐந்து சதவிகிதத்தை லாபப் பங்குத் தொகையாக தரும்.
அப்படி மத்தியரசு போட்ட ஐந்து கோடி ரூபாய்க்கு (இப்போது எல்.ஐ.சி திருத்தச் சட்டத்தின் படி நூறு கோடி ரூபாய்) கடந்த 2017-2018 நிதியாண்டின் லாபத்தில் அரசுக்கு சேர வேண்டிய ஐந்து சதவிகிதத் தொகையான ரூபாய் 2,430 கோடி ரூபாய் எல்.ஐ.சி உயரதிகாரிகளால் மத்திய அமைச்சர் அருண் ஜெய்ட்லியிடம் வழங்கப்பட்டது.
இத்தனை ரூபாய் தருகிறார்களே, கொஞ்சம் புன்னகையோடு போஸ் கொடுப்போம் என்று உள்ளதா அந்த மந்திரிக்கு?
"எல்.ஐ.சி யின் பங்குகள் மட்டும் விற்கப்பட்டிருந்தால்" என்று கடந்த ஆண்டு எல்.ஐ.சி யின் வைர விழாவிலேயே புலம்பிய மஹானுபாவன் அல்லவா!
நம் முதலாளிகளான உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டிய லாபம் இந்திய நாட்டுக்கும் பாலிசிதாரர்களுக்கும் போகிறதே என்ற விரக்தியில் அமைச்சர் முகம் உம்மென்று ஆகி விட்டதோ?
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete