Friday, November 23, 2018

நாற்பதாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவரை . . .





எட்டாவது படிக்கும் போது காரைக்குடி அழகப்ப செட்டியார் மாதிரி உயர்நிலைப்பள்ளியில் ஒரு இரண்டு நாள் சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி எல்லாம் காண்பித்தார்கள்.

பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த போது ஒரு இடத்தில் நிறுத்தி இறங்கு, இறங்கு என்று எல்லோரையும் ஒரு பொட்டல் காட்டில் இறக்கினார்கள்.

அங்கே சாலையில் ஒரு நீண்ட ஸ்தூபியின் மேலே வாளை உயர்த்திய கட்டபொம்மன் சிலை. இந்த இடம்தான் கயத்தார். இங்கேதான் வீர பாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்டார்கள் என்றார் ஒரு ஆசிரியர்.

சரியாக நாற்பதாண்டுகளுக்குப் பிறகுதான் அந்த சிலையை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நெல்லை மகளிர் மாநாட்டுக்கு சென்று வேலூர் திரும்புகையில் இந்த முறை வண்டியை நிறுத்தியது என்னமோ நான்தான்.

கட்டபொம்மனின் வீரத்தை திரையிலே நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய நடிகர் திலகம் உருவாக்கித் தந்த கட்டபொம்மனின் சிலையிலும் கம்பீரம் அப்படியே இருந்தது.

இப்போதும் அந்த இடம் பொட்டல் காடாகவே இருந்தாலும் தமிழக அரசு ஜெ காலத்தில் உருவாக்கிய மணி மண்டபம் இருக்கிறது. 



நாங்கள் சென்ற சமயம் அந்த மணி மண்டபம் பூட்டி இருந்ததால் மெலிதாக திறந்திருந்த ஜன்னல் வழியே எடுத்த வெங்கலத்தாலான கட்டபொம்மன் சிலை கீழே உள்ளது.



ஆனாலும் பழைய சிலையின் கம்பீரம் போல அவ்வளவாக இல்லை என்று எனக்கு தோன்றியது.

4 comments:

  1. ஒரே ஒருமுறை சென்று பார்த்திருக்கிறேன்

    ReplyDelete
  2. காரைக்குடி அழகப்ப செட்டியார் மாதிரி உயர்நிலைப்பள்ளி
    + 2 Which batch? I am second batch.

    ReplyDelete
  3. Replies
    1. Sorry.
      நான் ஆறாவது முதல் எட்டாவது வரைதான் அங்கே படித்தேன். ஒன்பதாவது முதல் ப்னிரெண்டாவது படித்தது திருக்காட்டுப்பள்ளியில். நான் +2 மூன்றாவது பேட்ச். அந்த மூன்றாவது பேட்சில் காரைக்குடி பள்ளியில் படித்த ரமேஷ் (இப்போது இங்கிலாந்தில் டாக்டர், இன்னும் தொடர்பில் உள்ளார்.

      Delete