சனிக்கிழமையன்று மிக அவசரமான வேலையாக சென்னை செல்ல வேண்டியிருந்தது, இரவு வீட்டிற்கு திரும்புகையில் வாசலில் பார்த்த காட்சி மனதிற்கு வருத்தமாக இருந்தது.
வீட்டு வாசலில் இருந்த வேப்ப மரத்தின் அனைத்து கிளைகளையும் மின் வாரியத்தினர் வெட்டிப் போட்டு அது ஒரு மொட்டை மரமாய் காட்சியளித்தது.
இன்று காலையில் கவனித்தேன். வெட்டப்பட்ட மரத்தில் இரண்டு இடங்களில் இலைகள் துளிர்த்திருந்தன. அதைப் பார்க்கையில் உருவான இதமான உணர்வை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
ஆரவாரப் புயலாய் இருக்கலாம்,
அடுத்தவர் அழிவில் இன்பம் காணும்
ஆட்கொல்லி மனிதராயும் இருக்கலாம்.
எதிர்பாரா தாக்குதல் நடத்தி
நிலைகுலையச் செய்வதே
நோக்கமாய் இருக்கலாம்.
நாம் மண்ணில் காலூன்றி
மனதில் உறுதியாய் இருந்தால்
இழந்தது எதுவாயினும்
அது மெல்லமாய் துளிர்க்கும்
மீண்டும் மீண்டும்.
இலைகள் மட்டுமல்ல,
எதிர்த்து போராடுவதற்கும்
வாழ்ந்து காட்டுவதற்கும்
உயிர் மூச்சாம்
நம்பிக்கையும் கூட. . .
சின்னச் சின்னதாய்
கவிதையும் கூட . . .
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteSame feeling here. A day before Diwali they cut the tree infront of my house and the corporation lorry took 150 Rs. (that too after huge bargain - demand was Rs.400/-) to clear the branches. Now, last three days tree 'TULIR' vida arambikudu. Very nice to see and I feel better mentally.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteS.Raman, VelloreNovember 23, 2018 at 8:23 AM
Deleteஅனாமதேயமா ஒளிஞ்சு நிக்கற கோழையெல்லாம் துணிச்சல் பற்றி பேசக்கூடாது. நீ உன் ஒரிஜினல் அடையாளத்தோட வா. உன்னோட பொறுக்கிக் கூட்டணியில் யாரெல்லாம் இருக்காங்கன்னு சொல்றேன்