Thursday, November 15, 2018

நோபல் பரிசையும் பறித்து விடலாம், ஒபாமாவிடமிருந்தும் . . .




மியான்மர் நாட்டின் தலைவரான ஆங்-சான்-சுகி க்கு அளிக்கப்பட்ட “மனசாட்சியின் தூதுவர்” என்ற விருதை திரும்பப் பெறுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டநேஷனல் அறிவித்துள்ளது.

ராணுவ ஆட்சிக்கு எதிராக நீண்ட காலம் போராடியவர், வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர் ஆங்-சான்-சுகி. அவருக்கு நோபல் அமைதிப்பரிசு கூட வழங்கப்பட்டது. 2009 ல் அம்னெஸ்டி அமைப்பும் அவருக்கு விருது அளித்தது.

அவருடைய போராட்டம், மனித உரிமை மீதான ஆர்வமெல்லாம் பொய்யாய், பழங்கதையாய் மாறி விட்டது.

எப்போது?

அவரது கட்சி தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த பின்பு.

வேற்று நாட்டினரை திருமணம் செய்து கொண்டார் என்ற அடிப்படையில் அவரால் ஜனாதிபதியாக முடியாவிட்டாலும் கூட அவர் கண்ணசைவின் அடிப்படையில்தான் ஆட்சி நடக்கிறது.

அவரது ஆட்சியிலும் சரி, அதற்கு முன்பும் சரி, ரோஹிங்க்யா முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக அவர் வாய் திறக்கவே இல்லை ஏழரை லட்சம் ரோஹிங்க்யாக்கள் மியன்மரை விட்டு பங்களாதேஷிற்கு அகதிகளாக புலம் பெயர்ந்த கொடுமையை அவர் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரது ஆட்சியில் கூட ரோஹிங்க்யா முஸ்லீம்களின் துயரம் தொடர்ந்தது. அதைப் போக்குவதற்கு அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரோஹிங்க்யாக்கள் மியன்மரின் மீதான முட்கள். அவர்கள் அகற்றப்பட வேண்டும் என்ற ஒரு அமைச்சரின் திமிர் நிறைந்த பேச்சைக் கூட கண்டிக்கவில்லை.

போராளியாய் இருந்தவர் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பின்பு ஒரு சந்தர்ப்பவாதியாக ஆங்-சான்-சுகி தன் நிறத்தை மாற்றிக் கொண்டதை மனசாட்சியுள்ள அம்னெஸ்டி அமைப்பால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. 

“இனியும் உங்களை மனசாட்சியின் தூதுவர் என்றோ மனித உரிமைப் போராளி என்றோ மனித உரிமைப் போராட்டத்தின் அடையாளம் என்றோ கூற முடியாது” என்று சொல்லித்தான் அம்னெஸ்டி அவருக்கு அளிக்கப்பட்ட விருதை திரும்பப் பெற்றுள்ளார்கள்.

இதே அடிப்படையில் அவருக்கு அளிக்கப்பட்ட  அமைதிக்கான நோபல் பரிசையும் திரும்பப் பெறுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

ஆப்கானில் அமெரிக்கப் படைகளை  திரும்பப் பெறுவேன் என்ற ஒரு அறிவிப்பிற்காக பாரக் ஒபாமா விற்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசைக் கூட திரும்பப் பெறுவது உத்தமம்.

அதே போல பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக ஒலிம்பிக் ஜோதி பயணத்தின் போது பல நாடுகளிலும் பிரச்சினைகளை உருவாக்கி ஒலிம்பிக் போட்டிகளையே சீர்குலைக்க முயன்ற தலாய் லாமாவிடமிருந்தும் கூட . . .

9 comments:

  1. What's your problem with dalai lama, he is just trying to fight for freedom for the oppressed Tibetans, just like the palestenians.

    ReplyDelete
  2. ஒலிம்பிக் போட்டிகளையே சீர்குலைக்க முயன்ற தலாய் லாமாவிடமிருந்தும் கூட . . .

    கீழ்த்தரமான அடிமை உணர்வு உங்களுக்கு தோழரே
    தலாய் லாமா உயிர் சேதம் , உடல் சேதம் இன்றி தங்கள் சீன எதிர்ப்பு உணர்வை காட்டினால் என்ன தவறு ?

    ஒலிம்பிக் போட்டியே சீர் குலைந்திருந்தால் கூட என்ன தவறு ? எந்த உயிரையும் திபெத்தியர் கொல்லவில்லையே

    இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடந்தால் அதை காஷ்மீரிகள் எதிர்த்திருந்தால் அதை நீங்கள் முட்டு கொடுத்து வக்காலத்து வாங்கி இருப்பீர்கள் .

    எங்களுக்கு திபெத், காஷ்மீர் , ஈழம் எல்லாம் ஒன்றுதான்

    ஆனால் இந்திய கம்யூஸிட் களுக்கு தான்

    வசதிக்கு ஏற்றமாதிரி மாறுபடும்..

    காஷ்மீரிக்கு இருக்கும் அதே சுதந்திர உணர்வு திபெத்தியனுக்கும் , Uighur முஸ்லீம் க்கும் , ஈழ தமிழனுக்கும் இருக்கும்
    இதெல்லாம் எந்த இந்திய கம்யூனிச போராளியின் மழுங்கிய மூளைக்கும் புரிய போவதில்லை

    சீனா என்றால் என்ன பீப் .. ஆ ?

    ReplyDelete
  3. இந்திய சீன உறவுகளை சீரழிக்கும் முள் தலாய் லாமா. இந்திய மண்ணில் அகதியாய் அவர் அடைக்கலம் பெற்ற போது இங்கிருந்து கொண்டு அவர் எந்த அரசியல் நடவடிக்கையும் செய்ய மாட்டேன் என்ற உறுதிமொழியோடுதான் உள்ளே வந்தார். தலாய் லாமா எப்போது திபெத்திலிருந்து ஓடி வந்தார்? புத்த மத மடங்களின் நிலங்களை ஏழை மக்களுக்கு பிரித்து கொடுத்த போது. மதத்தின் பெயரில் உலா வரும் ஒரு பண்ணையார் என்பது போராளிகளுக்கு புரியாதது ஆச்சர்யமளிக்கிறது. யாசர் அராபத் போல களத்திற்கு போக வேண்டியதுதானே! இவர் இங்கே சொகுசாக சகல சௌகர்யங்களுடன் வாழ்ந்து கொண்டு திபெத்திய வாலிபர்களின் உயிரை பலி கொடுத்தவர்

    ReplyDelete
    Replies
    1. யாசிர் அரபாத் வன்முறை போராட்ட வீரர்
      தலாய் லாமா அகிம்சை வீரர்
      மகாத்மா காந்தியிடம் சேகுவேராவை எதிர்பார்க்க முடியாது


      "திபெத்திய வாலிபர்களின் உயிரை பலி கொடுத்தவர்"

      அப்போ ஆயுதம் ஏந்தாத திபெத் வாலிபர்களை சீன அரசு கொல்கின்றது அப்படித்தானே



      Delete
    2. தலாய் லாமா உத்தமரா , மோசமானவரா என்பது விவாதம் அல்ல

      அவர் ஆயுதம் ஏந்தாது, பயங்கரவாதம் செய்யாது தனது இன உரிமைக்காக போராடுகின்றார்.

      போராடுவது அவர் இன மக்கள் .. அந்த மக்களுக்கு போராட உரிமை இல்லையா ?

      ஒலிம்பிக் போட்டியில் குண்டு வெடிக்க காரணமாக இருந்தால் அது மோசமான பயங்கரவாதம்
      ஆனால் எதுவும் செய்யாதது ஒலிம்பிக் தீபத்தை தடுப்பதையெல்லாம் பெரும் குற்றமாக கூறும் உங்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ள திமுக , அதிமுக அடிமை கும்பலுக்கும் ஒரு வேறுபாடு கூட இல்லை

      Delete
    3. சீனாவில் போராடும் Uighur முஸ்லீம் இனத்துக்காவது போராடும் உரிமை உண்டா?

      இல்லை என்றால் அவர்களை ஒட்டு மொத்தமாக குண்டு வைச்சு அழிச்சு விடுவோமா ?

      Delete
    4. I thought Raman was a reasonable person, but he proved himself to be hypocritical communist, talking a big talk about freedom and oppression but blindly supporting autocratic China. Not one word about what china does to uighur muslims.Not planning to come back to this blog.

      Delete
    5. அது உங்கள் விருப்பம்.

      Delete
  4. ஹலோ, இந்த பதிவே நோபல் அமைதி விருது பெரும் அளவிற்கு தலாய் லாமா உத்தமர் இல்லை என்பதைச் சொல்லத்தான்.

    ReplyDelete