கடந்த
ஞாயிறு 18.11.2018 அன்று எங்களின் ஏழாவது தமிழ் மாநில உழைக்கும் மகளிர் மாநாடு நெல்லையில்
நடைபெற்றது. திரைக் கலைஞரும் தமுஎகச அமைப்பின் துணைத்தலைவருமான தோழர் ரோகினி மாநாட்டை
துவக்கி வைத்தார்.
மதமும்
ஜாதியும் இன்று வரை பெண்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்பதை அழுத்தமாக கூறிய அவரது
உரையில் ஒரு சுவாரஸ்யமான பகுதியை மட்டும் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
“நீங்கள்
எல்லாம் மகளிர் மட்டும் திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள். அதிலே அலுவலகத்தில் பெண்கள்
சந்திக்கும் பாலியல் சீண்டல்கள் தான் பிரதானமாக பேசப்பட்டிருக்கும். மூன்று வித்தியாசமான
பெண் கதாபாத்திரங்கள். மூவருக்கும் மேலாளர் கதாபாத்திரத்தால் பிரச்சினை வருகிற போது
ஒன்று சேர்ந்து எதிர்த்து பாடம் புகட்டுவோம்.
நாசர்
கதாபாத்திரத்திற்கு எதிராக பாப்பம்மா, ஜானகி, சத்யா என்று நாங்கள் மூவரும் இணைத்து
சங்கிலியை உயர்த்தினோம்.
இன்று
சமூகத்திலும் பல வில்லன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு எதிராக பாப்பம்மாக்களும்
ஜானகிகளும் சத்யாக்களும் கூட்டணி அமைப்பதும் சங்கிலியை உயர்த்துவதும் இப்போதும் அவசியமானதுதான்”
No comments:
Post a Comment