Monday, November 19, 2018

இன்சூரன்ஸிற்கு அவசியம் வராதென்றவர் . . .


நேற்று ஒரு மகத்தான மனிதர் மறைந்தார். கீழத்தஞ்சை மாவட்டத்தில் தோழர் பி.சீனிவாசராவ் உருவாக்கிய போராட்ட பாரம்பரியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்ற செங்கொடி இயக்கத்தின் தியாகப் புதல்வர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் கோ.வீரய்யன் அவர்களுக்கு வீர வணக்கம். 

தஞ்சையிலும் வெண்மணியிலும் அவரது உரையை சில முறை கேட்டுள்ளேன். ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து விவசாயத் தொழிலாளியாக, விவசாயியாக வாழ்க்கை நடத்தி விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக, தலைவராக, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக உயர்ந்த தோழர்.

இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அற்புதமான தோழர். 

அவரது வாழ்க்கை வரலாற்று நூலான "செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம்" என்ற அவரது நூல் நிலப் பிரபுத்துவ கொடுமைகளையும் அதற்கெதிரான வீரம் செறிந்த போராட்டத்தையும் விரிவாக விளக்குகிற ஒரு கையேடு.

எங்கள் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் திருவாரூரில் நடத்துகின்ற வெண்மணி சங்கமக் கூட்டத்தில் இரண்டாண்டுகள் முன்பாக அவர் பங்கேற்று உரையாற்றுகையில்

"ஒரு எல்.ஐ.சி ஏஜெண்ட் என்னை ஒரு எல்.ஐ.சி பாலிசி எடுக்கும் படி கேட்டுக் கொண்டார். அந்த பாலிசிக்கான பிரிமிய தொகை பத்து ரூபாயோ, என்னவோ, ஆனால் நான் பாலிசி வேண்டாம் என்று சொல்லி விட்டேன். காரணம் இந்தியாவில் புரட்சி கண்டிப்பாக வரும். புரட்சி அரசு அனைத்து மக்களுடைய தேவைகளையும் நிறைவேற்றும். அதனால் நான் தனியாக ஒரு பாலிசி எடுக்க வேண்டிய அவசியமில்லை."

மக்கள் மீதும் அவர்களது போராட்ட உணர்வின் மீதும் தன் வாழ்நாளிலேயே ஒரு சமூக மாற்றம் வரும் என்று நம்பிக்கையோடும் தன் வாழ்க்கையை உழைக்கும் மக்களுக்காக அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவருக்கு செவ்வணக்கம். 


7 comments:

  1. தோ. G.V. அவர்களின் மறைவுக்கு
    எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. one enemy less for india. Let this continue.

    ReplyDelete
    Replies
    1. காவிகள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதற்கு ஆதாரம் இந்த பின்னூட்டம்

      Delete
    2. இவனை எல்லாம் கொலை செய்தால் கூட தவரில்லை. மனிதன் அல்ல, மிருகம்

      Delete
    3. அட, இவனை மிருகம் என்று சொல்லி மிருகங்களை இழிவு படுத்த வேண்டாம். காவி என்று சொன்னாலே போதும்

      Delete
  3. I didn't know about the book.Let his dream become a reality soon.

    ReplyDelete
  4. I didn't know about the book.Let his dream become a reality soon.

    ReplyDelete