Monday, November 12, 2018

வெள்ளையரின் எதிரி, காவிக்கும் கூட . . .



திப்பு சுல்தானை காவிகள் ஏன் மிகக் கடுமையாக எதிர்க்கிறார்கள்?

இஸ்லாமியர் என்பதற்காகவா?

அது ஒரு காரணம்தான்.

அதைத்தாண்டி இன்னொரு காரணமும் உள்ளதாக உணர்கிறேன்.

வெள்ளையர்களிடம் மண்டியிட்டதும் மன்னிப்பு கேட்டதும் அவர்கள் ஆட்சிக்கு விசுவாசமாக நடந்து கொண்டதும்தான் காவிகளின் பாரம்பரியம்.

ஆனால் வெள்ளையர்களுக்கு எதிராக வீரச்சமர் புரிந்த அரசன் திப்பு சுல்தான்.

வெள்ளையர்களின் எதிரி காவிகளுக்கும் எதிரிதானே!

காந்தி முதற்கொண்டு கம்யூனிஸ்டுகள் வரை காவிகள் எதிர்ப்பதற்கு இதுவும் கூட காரணமாக இருக்கும்.

பாரம்பரியமற்ற, காட்டிக் கொடுத்த, தரகு வேலை செய்யும் கும்பலுக்கு வீரர்கள் என்றால் கசக்கத்தானே செய்யும்!

9 comments:

  1. வெள்ளையன் கூடவே இருந்த அம்பேத்கார்
    எந்த சிறைக்கும் போகாத , அம்பேத்கார் எந்த வகை ?

    இந்த கமெண்ட் வெளிவருமா ?

    ReplyDelete
    Replies
    1. அண்ணல் அம்பேத்கரையும் காவிகளையும் ஒப்பிடுவதைப் போன்ற அபத்தம் ஏதுமில்லை. அவர் தன் மக்களின் விடுதலைக்காக நேர்மையாக போராடியவர்.

      ஆபாச கமெண்டுகளை மட்டுமே நான் பிரசுரிப்பதில்லை. பிரசுரித்து நீக்கி விடுவேன்

      Delete
    2. அம்பேத்கார் தன் மக்கள் விடுதலைக்காக போராடினார்
      உண்மைதான்
      ஆனால் இந்திய விடுதலைக்காக போராடினாரா ?
      வெள்ளையனுடன் சேர்ந்து இருந்தார் ...
      அவர் கற்றவர் , ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர் என்னும் காரணங்களுக்காக முன்னுரிமை கொடுத்தார்கள்
      அம்பேத்கார் கம்யூனிச கொள்கையை முழுமையாக நிராகரித்தார்

      Delete
    3. உங்க பிரச்சினைதான் என்னங்க? எதுக்கு சம்பந்தமே இல்லாம இங்க அம்பேத்கரை இழுக்கறீங்க? அவரையும் ஆர்.எஸ்.எஸ் கும்பலையும் ஒப்பிடுவதிலேயே நீங்க யாருன்னு தெரியுது

      Delete
    4. அம்பேத்கரும் கம்யூனிஸ்டுகளும் இணைந்து நடத்திய போராட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

      Delete
    5. "To the Muslims a Hindu is a Kaffir. A Kaffir is not worthy of respect. He is low-born and without status. That is why a country which is ruled by a Kaffir is Dar-ul-Harb (Abode of War) to a Musalman. Given this, no further evidence seems to be necessary to prove that the Muslims will not obey a Hindu government.
      The basic feelings of deference and sympathy, which predispose persons to obey the authority of government, do not simply exist. But if proof is wanted, there is no dearth of it. It is so abundant that the problem is what to tender and what to omit…
      In the midst of the Khilafat agitation, when the Hindus were doing so much to help the Musalmans, the Muslims did not forget that as compared with them the Hindus were a low and an inferior race.”
      - From Pakistan or Partition of India, 1940 by B.R. Ambedkar

      Delete
    6. என்ன பாஸ்
      என்னோட கமெண்ட் ஐ காணோம் ? :P

      Delete
    7. அலுவலக நேரத்தில் வலைப்பக்கம் வருவதில்லை. அந்த நேரத்தில் போடப்படும் கமெண்டுகளை பிறகுதான் பிரசுரிக்க முடியும். ஆபாச வார்த்தைகள் உள்ள பின்னூட்டங்களை மட்டுமே நான் வெளியிட்டு அகற்றி விடுவேன். மேலும் அண்ணல் அம்பேத்கரை அவசியமின்றி இழுத்து காவிகளிடமிருந்து இப்பதிவை திசை திருப்புவதை நிறுத்திக் கொள்ளவும்

      Delete
  2. எஸ் எல் பைரப்பா எழுதிய ஆவாரணா படித்திருக்கிறீர்களா? தமிழில் திரை என்ற மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது. திப்பு பற்றி அவர் அதில் விரிவாக எழுதி இருக்கிறார்

    ReplyDelete