மத்திய விவசாய அமைச்சகத்தின் ஒப்புதல் வாக்குமூலம் - செல்லா நோட்டால் வீழ்ந்தோம்
மத்திய விவசாயத்துறை அமைச்சகம் ஒப்புதல் வாக்குமூலம் அதுவும் எழுத்துபூர்வமாக
நிதியமைச்சகத்தின் நிலைக்குழுவிற்கு அளித்த அறிக்கையில்
"செல்லா நோட்டு விவகாரத்தால் விவசாயிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்"
என்று கூறியுள்ளது.
ஆம்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக பல லட்சம் விவசாயிகளால் விதைகளையோ உரங்களையோ வாங்க முடியாமல் அந்த பருவத்தில் விவசாயம் செய்வதையே கைவிட்டு விட்டார்கள்.
பெரிய விவசாயிகளால் கூட விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. அதனாலும் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.
தேசிய விதைக் கழகத்தால் (National Seeds Corporation) 1.38 லட்சம் குவிண்டால் கோதுமை விதைகள் விற்க முடியாமல் தேங்கி விட்டது. இதற்குக் காரணம் விவசாயிகள் கைவசம் பணம் இல்லாத பிரச்சினைதான்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டது விவசாய உற்பத்திதான்.
இதுதான் விவசாய அமைச்சகம் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்.
செல்லா நோட்டை ஆதரித்த செல்லாக்காசுக்கும் பிரயோசனம் இல்லாத பேர்வழிகள் இதற்கு என்ன பதில் கொடுப்பார்கள்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteS.Raman, VelloreNovember 23, 2018 at 8:23 AM
Deleteஅனாமதேயமா ஒளிஞ்சு நிக்கற கோழையெல்லாம் துணிச்சல் பற்றி பேசக்கூடாது. நீ உன் ஒரிஜினல் அடையாளத்தோட வா. உன்னோட பொறுக்கிக் கூட்டணியில் யாரெல்லாம் இருக்காங்கன்னு சொல்றேன்