Tuesday, June 26, 2018

மாம்பழ சீசன் முடியும் முன் முயற்சியுங்கள் . . .


மேங்கோ ட்ரியோ – மாம்பழத்தின் அதி உன்னத சுவைக்கு



இந்த வருடம் தரமான மாம்பழங்கள் நன்றாகவே கிடைக்கிறது. அப்படியே சாப்பிடுவது, மில்க் ஷேக் செய்து சாப்பிடுவது என்று ஓடிக் கொண்டிருக்கும் மாம்பழ சுவையனுபவத்தில் செய்த ஒரு முயற்சி இங்கே.

மாம்பழ மில்க் ஷேக் செய்து கொண்டேன். எப்படி செய்வது என்பதற்கு முன்னர் பதிவு செய்ததின் இணைப்பை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

மாம்பழ ஃப்ளேவர் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டேன்.

ஒரு பெரிய கண்ணாடி டம்ப்ளரில் முதலில் இரண்டு ஸ்பூன் ஐஸ்கிரீம். பிறகு மாம்பழத் துண்டுகள், அதன் பின்பு மில்க் ஷேக், அதன் மீது மீண்டும் ஐஸ் கிரீம், அதன் மீது மாம்பழத்துண்டுகள். அதன் தலையில் பொடி செய்த பாதாம், முந்திரி பொடி தூவி, ஒரு செர்ரியை தலையில் வைத்து சாப்பிடுங்கள்.

அதி உன்னத சுவைக்கு நான் கியாரண்டி.

இந்த கண்டுபிடிப்புக்கு ராயல்டி எல்லாம் வேண்டாம்.

2 comments:

  1. பார்க்கவே அருமையாக உள்ளது

    ReplyDelete
  2. இப்படியான செய்முறைகளில் மாம்பழத்தின் சுவையே கிடைக்கிறது. நன்றி.
    பிரெட்டுக்கு தொட்டுக் கொள்ளும் மாம்பழ ஜாம் பழஊறலில் மாம்பழத்தின் சுவை குறைவு.

    ReplyDelete