கொல்கத்தா
பயண அனுபவத்தினை நிறைவு செய்யும் முன் இரண்டு பதிவுகளை எழுத வேண்டியுள்ளது.
சென்னையிலிருந்து
கொல்கத்தா சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் கொல்கத்தாவை நெருங்கும் வேளையில் ஒரு அறிவிப்பு
ஒன்றைச் செய்தார்கள்.
ஏதோ
ஒரு நிறுவனத்தின் பெயரைச் சொல்லி அது ஸ்பைஸ்ஜெட் பயணிகளுக்கு இலவசப்பரிசு ஒன்று தருவதாகவும்
அதற்கான கூப்பன் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் அதிலே ஒட்டப்பட்ட தாளை பிய்த்தால்
என்ன பரிசு என்று தெரியும் என்றும் விமான நிலையத்தில் உள்ள அந்த நிறுவனத்திடம் பரிசைப்
பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தார்கள்.
அனைவருக்கும்
அந்த கூப்பனைக் கொடுத்த பின்பு, அந்த பரிசு இலவசம்தான், ஒவ்வொன்றும் நாலாயிரத்திலிருந்து
ஐயாயிரம் ரூபாய் மதிப்புடையது. அந்த தொகையை நீங்கள் தரவேண்டியதில்லை. ஆனால் வரி மற்றும்
இதர கட்டணங்களுக்காக ரூபாய் 1,299 ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் என்று இன்னொரு
அறிவிப்பு வந்தது.
எனக்கு
கொடுக்கப்பட்ட ஒரு கூப்பனில் ஒரு ஜோடி வாட்ச் என்று வந்தது. அதன் மதிப்பு ரூபாய் 3,990 என்று இருந்தது. அதன் வொர்த் 1300 ரூபாய் கூட இருக்கும் என்று தோன்றாததால் நான் பாட்டிற்கு லக்கேஜை எடுத்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து விட்டேன்.
ஆறு பேர் கொண்ட ஒரு குடும்பம், பரவசமாக அந்த கடையை நோக்கிப் போய்க் கொண்டிருந்ததைப் பார்த்தேன். வேறு சிலரும் கூட.
வேலூர் வந்த பிறகு இணையத்தில் அந்த பிராண்ட் வாட்சின் விலை என்ன என்று தேடிப்பார்த்தால் அடக்க விலையே ரூபாய் 1200 என்றுதான் இருந்தது.
ஆக அடக்க விலையை விட நூறு ரூபாய் அதிகமாக வைத்து அதை இலவசப்பரிசு என்று வேறு பெருமையாகச் சொல்கிறார்கள்.
என்னங்கடா இது புது விதமான மோசடியா இருக்கு !!!!!!
This has been happening for several years.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete