Thursday, June 14, 2018

தீர்ப்பின் பின்னே தெரிவது என்ன?



பதினெட்டு எம்.எல்.ஏ க்களின் பதவி பறிப்பு வழக்கில் இரண்டு நீதிபதிகள் இரு வேறு தீர்ப்புக்கள் கொடுத்ததன் மூலம் பிரச்சினை இன்னும் கால தாமதமாகப் போகிறது என்பது ஒரு புறம் இருந்தாலும் தலைமை நீதிபதியின் தீர்ப்புதான் சர்ச்சை நிறைந்ததாக உள்ளது.

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ க்கள் விஷயத்தில் சபாநாயகருக்கு உரிமை கிடையாது என்று சொன்ன அதே வாயால்

தமிழக சபாநாயகரின் செயலை நியாயப்படுத்தியுள்ளார்.

இது முரண்பாடு என்று சட்ட ஞானம் உள்ளவர்கள் சொல்லலாம். 

ஆனால் இரண்டு தீர்ப்பும் ஒன்றுதான்.

இரண்டுமே பாஜக விற்கு சாதகமான தீர்ப்புதான்.

பாஜக ஆட்கள் ஜனநாயக விரோதமாக நியமனம் செய்ததை ஏற்றுள்ளார்.

பாஜகவின் அடிமை ஆட்சிக்கு எதிரான எம்.எல்.ஏ க்கள் நீக்கப்பட்டதை ஏற்று எடுபிடி ஆட்சி தொடர்வதையும் உறுதி செய்துள்ளார்.

இது சட்டத்தின் தீர்ப்பா?
அரசியல் தீர்ப்பா?

இதன் பின்னணியில் எதிர்கால எதிர்பார்ப்புக்கள் இருக்கிறதா?

அமித் ஷாவை விடுதலை செய்த கையோடு கேரளாவின் ஆளுனராக பொறுப்பேற்றுக் கொண்ட கொடுமையை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா என்ன?


4 comments:

  1. நீதிபதிகளும் மனிதர்கள்தான். அவர்கள் பொதுமக்களுக்கு எதிராக தீர்ப்பு எழுதும்போது ஒரு மயிரைகூட இழப்பதில்லை. அனால் பிஜேபிகாரர்களுக்கு எதிராக தீர்ப்பு எழுதும்போது உயிரே போய்விடுகிறது. எனவே இந்த நீதிபதிகளின் மேல் கோவப்படுவதை விட்டுவிட்டு அவர்கள்மேல் பரிதாபப்படவேண்டும். நாலு நீதிபதிகள் நடுரோட்டில் வந்து நினனு நீதி கேட்ட போது இந்த மாக்களின் ரியாக்சன் என்ன? சுயமரியாதை திருமணத்தை முன்னெடுத்த தமிழ்நாடு நீதிமன்ற புறக்கனிப்பு இயக்கத்தை முன்னெடுத்து செல்லவேண்டும்.

    ReplyDelete
  2. நீதிபதிகளும் மனிதர்கள்தான். அவர்கள் பொதுமக்களுக்கு எதிராக தீர்ப்பு எழுதும்போது ஒரு மயிரைகூட இழப்பதில்லை. அனால் பிஜேபிகாரர்களுக்கு எதிராக தீர்ப்பு எழுதும்போது உயிரே போய்விடுகிறது. எனவே இந்த நீதிபதிகளின் மேல் கோவப்படுவதை விட்டுவிட்டு அவர்கள்மேல் பரிதாபப்படவேண்டும். நாலு நீதிபதிகள் நடுரோட்டில் வந்து நினனு நீதி கேட்ட போது இந்த மாக்களின் ரியாக்சன் என்ன? சுயமரியாதை திருமணத்தை முன்னெடுத்த தமிழ்நாடு நீதிமன்ற புறக்கனிப்பு இயக்கத்தை முன்னெடுத்து செல்லவேண்டும்.

    ReplyDelete
  3. கமல், ரஜினி மாதிரி பெரிய நடிகர்கள் அரசியலுகு வந்துவிட்டதால் தமிழக திரைத்துறையில் மிகப்பெரிய வெற்றிடம் நிலவுகிறது. எனவே இந்த நீதிபதிகள் திரைதுறைக்கு வந்தால் சூப்பர் ஸ்டார் ஆகிவிடலாம். என்னா நடிப்புடா சாமி. 18 MLAகள் தகுதிநீக்கம் ஆனாலும் சிக்கல் ஆகாட்டினாலும் சிக்கல் என்று தமிழர்கள் காய் நகர்த்தினால், இருவேறுப்ட்ட தீர்ப்ப சொல்லி அம்பலப்பட்டு நிற்கிறார்கள். இதுல கடவுளுக்கு மட்டுமே பணிகிறோம்னு டயலாக் வேற். தி-ககாரங்கூட கடவுள்னு ஒன்னு இருக்குமோ என்ற சந்தேகத்தோடு கடவுள் மறுப்பு பிரச்சாரம் செய்கிறான். ஆனால் பீஜேபிகாரனோ கடவுள் 100% இல்லேன்னு தெரிச்சுக்கிட்டு கடவுள்பேர சொல்லி மக்கள ஏமாத்துறான்.

    ReplyDelete
  4. சபாநாயகர் உரிமையில் தலையிட முடியாதுன்னு இங்க சொன்ன தீர்ப்ப முன்னுதாரனமா வச்சு அங்க (இதெ நீதிபதியிடம்) மேல்முறையீடு செய்யலாமே! ஆனா தமிழ்நாடு இங்கிலாந்து கண்ட்ரோல்ல இருக்கு, பாண்டிசேரி பிரான்ஸ் கண்ட்றோல்ல இருக்கு அதுனால இந்த தீர்ப்பு அங்க பொருந்தாதுனு குண்டக்க, மண்டக்க வியாக்கியானம் சொல்லும்.

    ReplyDelete