மாண்புமிகு என்ற வார்த்தைகள் எப்போதோ அர்த்தம் இழந்து விட்டது. மரபுகள் என்று சொல்லப்படுபவையெல்லாம் காணாமல் போய் விட்டது.
தமிழக சட்ட மன்றத்தைத்தான் சொல்கிறேன்.
"இருட்டு அறையில் . . ." என்று ஒரு படம் வந்ததாமே. மிகவும் கேவலமான படம் என்று பலரும் விமர்சித்திருந்தார்கள்.
தமிழக சட்டமன்றத்தைப் பார்த்துத்தான் இரட்டை அர்த்தமும் ஆபாசக் காட்சிகளையும் எடுத்தோம் என்று நாளை எந்த இயக்குனராவது சொல்வாரோ என்று அச்சமாக உள்ளது.
ஒரு பெண் உறுப்பினர் இழிவு செய்யப்படுகிறார். இரட்டை அர்த்தத்தோடும் ஆபாச சைகையோடும் அதைச் செய்பவர் சட்டமன்றத்தின் மாண்பை பாதுகாக்க வேண்டிய சபாநாயகர். ஆளும் கட்சி உறுப்பினர்கள் அதைப் பார்த்து சிரிக்கிறார்கள். சட்டசபையில் ஆபாசப்படம் பார்த்த கட்சியின் அடிமைகள் அல்லவா?
எதிர்க்கட்சி உறுப்பினர்களோ சிறிய அளவில் கூட கண்டிக்காமல் கௌரவ சபையில் வீற்றிருந்த பெரியோர் போல மௌனம் காக்கிறார்கள்.
சபாநாயகராக இருப்பினும் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் என்று யாராக இருந்தாலும்
தாங்கள் அடிப்படையில்
ஆண்கள்,
ஆணாதிக்க சிந்தனை உடையவர்கள்
என்பதை நிரூபித்துள்ளனர்.
ம்ம்ம்ம்.
ஒரே ஒரு இடதுசாரி உறுப்பினர் உள்ளே இருந்திருந்தால் இப்படி ஒரு அவலம் நிகழ்ந்திருக்குமா?
அன்று திரௌபதியின் அவலக்குரல் கேட்டு ஆடை கொடுத்த கண்ணன் கூட இடதுசாரி உறுப்பினர்கள் இல்லாத அவைக்கு வர அஞ்சிடுவான் அல்லவா?
No comments:
Post a Comment