Friday, June 8, 2018

எங்கெங்கு காணினும் அந்த முகம்தான் . . .

கொல்கத்தாவிற்கு  இப்போது நான் சென்றது நான்காவது முறை.

தோழர் ஜோதி பாசு முதல்வராக இருக்கையில் இரண்டு முறையும் தோழர் புத்ததேப் பட்டாசார்யா முதல்வராக இருக்கையில் ஒரு முறையும் சென்றுள்ளேன்.

கொல்கத்தா நகரெங்கும் விரிவாக சுற்றியுள்ளேன்.  தோழர் ஜோதிபாசுவின் புகைப்படத்தையோ அல்லது தோழர் புத்ததேப் பட்டாச்சார்யா புகைப்படத்தையோ, ஒரு சுவரொட்டியிலோ அல்லது அரசு விளம்பரத்திலோ அல்லது அரசு சம்பந்தப்பட்ட எந்த இடங்களிலும் பார்த்ததில்லை.

ஆனால் இந்த முறை கொல்கத்தா விமான நிலையத்தில் இறங்கிய உடனேயே மம்தா அம்மையாரின் முகம்தான். சுற்றுலாத்துறை சார்பாக வைக்கப்பட்ட ஒளி வீசும் விளம்பரங்கள்தான்.





வெளியே வந்தால் ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் அவர் புகைப்படமும் அந்த பகுதி எம்.எல்.ஏ படத்தோடுதான் நிழற்கூரை அமைக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான விளக்குத்தூண்களில் அவர் படம் போட்ட பேனர்தான்.

சென்னை திரும்ப விமான நிலையத்துக்கு போகையில் ஒரு நீண்ட காம்பவுண்ட். கிட்டதட்ட ஒரு கிலோ மீட்டராவது இருக்கும். அந்த ஒரு கிலோ மீட்டர் முழுதும் அவர் படம் போட்ட விளம்பரங்கள்தான்.



இவை எல்லாமே அரசு செலவில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இவரைத்தான் எளிமையானவர் என்று முதலாளித்துவ ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

-         பயணம் தொடரும்

2 comments:

  1. ஊடகங்கள் மட்டுமல்ல. உடனிருப்போரில் பலரும்கூட இதுபோன்ற அவரின் செயல்பாட்டுக்கு உதவியாக இருக்கின்றார்கள் போலுள்ளது.

    ReplyDelete
  2. விமான நிலையத்தில் பலரும் பார்க்கும் படியாக சுற்றுலாத்துறை சார்பாக இவர் படம் வைக்கப்பட்டதிற்கு மம்தா வெட்கபட வேண்டும்.
    //ஆனாலும் இவரைத்தான் எளிமையானவர் என்று முதலாளித்துவ ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.//
    ஜெயலலிதாவை தமிழ் தாயாக, எளிமையானவராக உருவாக்கியது போல்.

    ReplyDelete