Thursday, June 7, 2018

அமைதியாய் உறங்கும் அன்னை





இந்த முறை கொல்கத்தா செய்கையில் அன்னை தெரஸாவின் “மிஷன் ஆப் சாரிட்டிஸ்”  இல்லத்திற்கு போக வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். அங்கே ஒரு அருங்காட்சியகம் அமைத்துள்ளதாக படித்திருந்தேன். பார்வை நேரம் என்றோ, விடுமுறை என்றோ எதுவும் கிடையாது என்று இணையத்தில் தவறாக குறிப்பிட்டிருந்தனர் என்பது அங்கே இரவு ஒரு ஏழு மணி அளவிற்கு சென்ற போதுதான் தெரிந்தது.

கதவுகள் மூடப்பட்டிருந்தன. அங்கே இருந்த மணியை இழுத்தால் திறப்பார்கள் என்று வாசலில் அமர்ந்திருந்த ஒரு யாசகர் கூறி அவரே மணியையும் அடித்தார்.

ஒரு வயதான மூதாட்டி கதவை திறந்து வந்தார். வியாழன் அன்று அருங்காட்சியகத்திற்கு விடுமுறை என்றும் மற்ற நாட்களில் ஆறு மணிக்கு பார்வை நேரம் முடிந்து விடும் என்று குறிப்பிட்ட அவர் நான் எங்கிருந்து வருகிறேன் என்று கேட்க, தமிழகத்திலிருந்து வருகிறேன் என்றதும் அவர் என்னை அன்னை தெரஸாவின் சமாதிக்கு மட்டும் அழைத்துச் சென்றார்.

ஏற்கனவே இருந்த ஒரு வழிபாட்டு அரங்கில் ஒரு மூலையில் அந்த சமாதி அமைக்கப்பட்டிருந்தது. அதனைப் பார்த்து விட்டு திரும்பி விட்டேன். நாளை காலை வந்தால் அருங்காட்சியகத்தைப் பார்க்கலாம் என்று அவர் கூறினார். நாளை காலை விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் புன்னகைத்து விட்டு திரும்பி விட்டேன்.

கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்தாலும் அந்த மாநகருக்கே உரிய இரைச்சல் கொஞ்சமும் இல்லாமல் அந்த பகுதி மட்டும் அமைதியாக இருந்தது என்பதை பதிவு செய்வது முக்கியம்.

-         பயணம் தொடரும்.


8 comments:

  1. only Marxists love missionary.Because their objectives are same. Too obvious to describe.

    ReplyDelete
    Replies
    1. ஆம். இருவருமே மனிதகுலத்தை நேசிப்பவர்கள்.
      மனித குல எதிரிகளான காவிகளுக்கு எரிச்சல் வரத்தான் செய்யும்

      Delete
    2. என்ன சார்
      வினவு சொன்ன தகவலை கமெண்ட் ஆக போட்டிருந்தேன்
      நீங்க வெளியிடவேயில்லை

      பொதுவுடைமைவாதிகளுக்கு இருக்கும் ஆக குறைந்த நேர்மை கூட உங்களுக்கு இல்லை

      வலதுசாரிகளை விட கேவலமாக இருக்கீங்க
      தீவிர வலதுசாரி , திமுக ஆதரவாளர் நரேன் ராஜகோபாலனை அவரது முகநூல் பக்கத்தில் மிக கடுமையாக , மோசமாக வசைபாடுவேன்
      ஆனால் ஒரு தடவை கூட என்னை பிளாக் பண்ணியதில்லை என் கமெண்ட் நீக்கியதில்லை

      Delete
  2. சரிங்க அப்போ எதுக்கு கம்யூனிச போராளிகள் வினவு குழுமம் மோசமாக தெரேசாவை விமர்சனம் செய்தார்கள் ?
    அவர்கள் மனித குல எதிரிகளா ?

    ( இந்த கமெண்ட் தங்களால் வெளியிடப்படும் என்று நம்புகின்றேன் )

    ReplyDelete
  3. ஆரம்பத்தில் நான் தெரேசாவை புனிதராக கருதினேன்
    ஆனால் 2010 இல் இணைத்துக்கு வந்த போது தெரேசா தொடர்பாக பல விடயங்களை வினவு ஆதாரத்துடன் எழுதியிருந்தது
    அதன் பின் அவர் மீதான புனித பிம்பம் உடைந்தது

    ReplyDelete
    Replies
    1. வினவு - அவர்கள் சிவப்பு சட்டை அணிந்த காவிகள். கணிப்பொறி புரட்சியாளர்கள் அவ்வளவுதான். மக்களிடம் செல்லாத அவர்கள் சொல்வதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை

      Delete
  4. idiot commie, don't indulge in self-praising. China licking Marxists and converting missionaries are dangerous to Bharath as they aim and closely collaborate to balkanize my motherland by subterfuge activities. Both evils are sworn anti-nationals.

    ReplyDelete