Monday, June 11, 2018

காலா – ஒரு கேள்வி, ஒரு ஏமாற்றம்




நேற்றைய பதிவின் தொடர்ச்சி

காலா படத்தின் ஒரு காட்சியில் ரஜனிகாந்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து போய் பஞ்சாயத்து நடக்கும். அநே இருக்கும் அமைச்சர் கதாபாத்திரத்தில்  நடித்த சாயாஜி ஷிண்டேவைப் பார்த்து போதையில் உள்ள ரஜனிகாந்த் “யாரு இவரு?” என்று மீண்டும் மீண்டும் கேட்டு வெறுப்பேற்றுவார். தூத்துக்குடி மருத்துவமனையில் மாணவன் சந்தோஷ்குமார் “யார் நீங்க?” என்று  கேட்ட போது இக்காட்சி உங்களுக்கு நினைவில் வந்ததா ரஜனிகாந்த் சார்? அக்காட்சியை பார்க்கும் போது தூத்துக்குடி சம்பவம் எனக்கு நினைவு வந்தது என்னமோ உண்மை.

“வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன். தில்லிருந்தா மொத்தமா வாங்கடா?”

என்று ட்ரெய்லரில் மீண்டும் மீண்டும் காண்பித்ததால்  பாட்சா படத்தில் மாணிக்கம் பாட்சாவாக மாறுகிற ஆக்ரோஷமான சண்டைக் காட்சி போல ஒரு ஆக்ரோஷமான சண்டையை எதிர்பார்த்தேன்.  பாட்சா படத்தின் அந்த காட்சியும் சண்டையும் மிகவும் பிடிக்கும். ஆனால் ஒத்தையில் நின்ன  நீங்க சண்டை போட துவங்கும் முன்னே உங்க ஆளுங்க வந்து சண்டை போட்டு உங்களுக்கு லைட்டா கூட கையை உயர்த்த வாய்பில்லாமல் செஞ்சுட்டாங்களே!

இக்காட்சி உருவாக்கியிருந்த பில்ட் அப் ஏமாற்றத்தைத்தான் அளித்தது.

நேற்றைய பதிவில் குறிப்பிடாத ஒரு நல்ல காட்சி.

காவல்துறையால் ஆடை அவிழ்க்கப்படும் பெண், ஆடையை எடுக்காமல் அருகில் உள்ள தடியை எடுத்து போலீஸை அடிக்கும் காட்சி சூப்பரான ஒன்று. 

5 comments:

  1. ரஜினி சூப்பர் ஸ்டார்னு நிரூபிச்சிட்டார். காலா படத்துல நடிச்சது மூலமா சங்கி-மங்கி கழுத்த அறுத்துட்டார். தூத்துகுடில நெகடிவ் பப்ளிசிட்டி ஸ்டன்ட் மூலமா அரசியல் வாழ்க்கைய முடிச்சுக்கிட்டார். இனி இவனுக ரஜினி டாய்லெட் வாசல்ல அரசியலுக்கு வரசொல்லி காத்திருக்க மாட்டானுக. ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. நல்ல விமர்சனம் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. சினிமாவை சினிமாவாக பாருடா
    தப்பு கண்டுபிடிக்க பார்க்காதே

    ReplyDelete
    Replies
    1. "ஒழுங்கா படிடா முண்டம். தப்பு கண்டுபிடிக்கனும்னே படிக்காதடா நாயே"

      என்று எழுத நான், நீயல்ல.

      மரியாதை கற்றுக் கொள்ளவும்

      Delete