Friday, June 8, 2018

கொல்கத்தாவின் தாஜ்மஹால்



கொல்கத்தாவில் அமைந்துள்ள விக்டோரியா மெமோரியலைத்தான் சொல்கிறேன். தாஜ் மஹால் போல காதல் சின்னம் கிடையாது. 

ஆனால் . . . . (அது பற்றி பின் குறிப்பில் எழுதுகிறேன்)

இதுவும் தாஜ் மஹால் போல ஒரு சலவைக்கல் அற்புதம்.  கொல்கத்தா போன ஒவ்வொரு முறையும் தவறாமல் சென்றுள்ளேன்.

சலவைக்கல்லில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அழகு மாளிகை இது. படங்களைப் பார்க்கையில் உங்களுக்கே புரியும்.











உள்ளே ஒரு அருங்காட்சியகம் உள்ளது. வழக்கமான அருங்காட்சியகங்கள் போல அரசர்கள் பயன்படுத்திய கத்தி போன்றவைகள்தான். அதைத் தவிர பல ஓவியங்களும் உள்ளது. குற்றாலம், ராமேஸ்வரம், மதுரை, திருச்செங்கோடு  ஆகியவற்றை ஒரு பிரிட்டிஷ் ஓவியர் வரைந்த ஓவியங்களைப் பார்க்கையில் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.

அருங்காட்சியகத்திற்கு உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாதாம். அது தெரிவதற்கு முன்பு எடுத்த ஒன்றிரண்டு புகைப்படங்கள் இங்கே.







கட்டிடத்திற்கு வெளியே உள்ள பூங்கா நன்கு பராமரிக்கப்படுகிறது. ஒரு சிறு ஓடை ஒன்றும் இருக்கிறது.  வண்ண மலர்களைப் பார்ப்பதும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவே உள்ளது.













பின் குறிப்பு : இங்கிலாந்தின் விக்டோரியா ராணியின் நினைவாக, வங்காளத்தை இரண்டாக பிரித்ததாக நாம் பாடப்புத்தகங்களில் படித்த கர்ஸன் துரையால் கட்டப்பட்டது இந்த மாளிகை.

ஆனால் இதுதான் கொல்கத்தா நகர காதலர்களுக்கான பூங்காவாக இருக்கிறது.  மாலை வேளை சென்ற போது தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு மூடப்பட்டிருந்தது. மறு நாள் மதியம்தான் சென்றிருந்தேன். நல்ல வெயிலிலும் பூங்காவின் பெஞ்சுகள் எல்லாம் காதலர்களால் ஆக்கிரமிக்கப்பட்டே இருந்தது. 

முந்தைய பயணங்களிலும் பார்த்த காட்சிதான் இது

-         பயணம் தொடரும்


1 comment: