புதுடெல்லி துணை நிலை ஆட்டுத் தாடி (Lieutenant Governor) க்கு எதிராக அவரது அலுவலகத்தில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நடத்தும் உள்ளிருப்புப் போராட்டத்துக்கு அஞ்சி ஆட்டுத்தாடி அலுவலகம் செல்வதில்லை.
அதை நக்கலடித்து ஒருவர் எல்.ஜி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் துணை நிலை ஆளுனர் அலுவலகத்தில் கேஜ்ரிவால் இருக்கும் படத்தோடு "உங்களுக்கு டெல்லியில் சேவை மையம் உள்ளதா? அங்கே எல்.ஜி தானும் வேலை செய்வதில்லை, மற்றவர்களையும் செய்ய அனுமதிப்பதில்லை"
என்று பதிவிட
அந்நிறுவனமோ மிகவும் பொறுப்பாக
"உங்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகர்யத்துக்கு மிகவும் வருந்துகிறோம். உங்களது தொடர்பு எண், முகவரியோடு என்ன பிரச்சினை என்பதையும் தெரிவித்தால் உடனடியாக அதை சரி செய்ய முயற்சிப்போம்"
என்று பதிலளித்துள்ளது.
வாடிக்கையாளர் சேவை என்றால் இப்படித்தான் பொறுப்பாக இருக்க வேண்டும்.
என்ன கடமையுணர்ச்சி !!!!!
No comments:
Post a Comment