Friday, September 23, 2022

மதுரைக்காரங்க மோசமானவங்கய்யா

 


பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மதுரை ஏ.ஐ.ஐ.எம்.எஸ் கட்டுமானப் பணியில் 95 % முடிந்து விட்டது என்றும் மோடி அதை விரைவில் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று ஏதோ ஒரு  ஃப்ளோவில்  சொல்லியுள்ளார்.

 


அப்படியா, நமக்கு தெரியலையே ஆச்சர்யப்படாம, சூப்பரா கட்டியிருக்காங்கய்யான்னு மோடியை பாராட்டாம, இந்த மதுரை எம்.பி தோழர் சு.வெங்கடேசனும் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூரும் அந்த இடத்துக்கே போய் ஒன்னுமே கட்டலைன்னு போட்டோ எடுத்து இப்படியா அசிங்கப்படுத்துவாங்க.

 


அதுல இந்த மதுரை எம்.பி வேற ஒரு எழுத்தாளருக்கே உள்ள குசும்போடு

 

“பாஜக ஆட்சி புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை தேடி நானும் மாணிக்கம் தாகூர் இருவரும் போனோம்.

 கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிலை போட்டு துப்பிய எச்சிலால்  சிவந்து கிடந்தது நிலம்”

 என்று காவல் கோட்டம் ஸ்டைலில் பதிவு போடறாரு.

 பொய் சொன்னா அனுபவிக்கனும். ஆராயக் கூடாது.

 எவ்வளவு மோசமான ஆளுங்க இவங்க!

 இனிமே நட்டா மதுரைக்கு வருவாரய்யா!

 வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணையில்லாத பாஜக ஆசாமிங்க வந்தாலும் வருவாங்களா!

6 comments:

  1. p.muhukumsran2010@mail.comSeptember 23, 2022 at 7:41 PM

    செம தோழர்

    ReplyDelete
  2. கட்டுமானம் ஆரம்பிக்க தேவையான பணிகளில் 95% முடிந்து விட்டது. விரைவில் கட்டுமானம் ஆரம்பிக்கும் என்று அவர் சொன்னார். அதை பேக் செய்திகாக கட்டுமானம் 95% முடிந்து விட்டது என்று சொன்னார்கள். அதையும் உண்மையாக நம்பி சென்ற எம்பிகள் ..அதையும் செய்தியாக வேறு நீங்கள் போடுகிறீர்கள். கொடுமை.

    ReplyDelete
    Replies
    1. கட்டுமானமே ஆரம்பிக்காத ஆஸ்பத்திரியை விரைவில் மோடி அர்ப்பணிப்பார் என்றாரே, அந்த விரைவுக்கு அர்த்தம் என்ன? பொய்யை இன்னொரு பொய்யால் சமாளிக்கும் மானங்கெட்டவர்கள்

      Delete
  3. ஹாஹா. வேற வழியில்லாமல் மானத்தை காப்பாத்த இப்படி ஒரு கதையை புதுசா ஆரம்பிச்சிட்டீங்க. நட்டா சொன்னதை வச்சு ஏன் ட்வீட் போட்டாரு, அதை எதுக்கு நீக்கினார்னு கொஞ்சம் ஆட்டுக்காரனை சொல்லச் சொல்லுங்க

    ReplyDelete
  4. நாங்கள் ஆட்சிக்கு வந்தது முதல் கை எழுத்து நீட் விலக்கு என்று சொன்னது
    போலத்தான் இதுவும்.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை, உற்பத்தி விலையைப் போல் ஒன்றரை மடங்கு கொள்முதல் விலை, ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு என்றெல்லாம் ஒரு அயோக்கியன் ஜும்லா வாக்குறுதி கொடுத்தது போல

      Delete