மற்ற கட்சிகளின் உட்கட்சி விவகாரங்கள் பற்றி எழுதக்கூடாது என்பதை கொள்கையாகக் கொண்டுள்ளேன். அதனால்தான் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகிய இருவரையும் நீதிமன்றம் செத்து செத்து விளையாட வைத்த கூத்து பற்றிக் கூட எழுதவில்லை.
ஆனால் இன்று காலையில் ஆங்கில இந்து நாளிதழின் தலைப்புச் செய்தி சிரிப்பை வரவழைத்து விட்டது.
ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கமிட்டியும் ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சி தலைவராக வேண்டும் என்று தீர்மானம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அநேகமாக காங்கிரஸ் தலைவர் தேர்தல் என்பது இறுதியில் அதை நோக்கித் தான் செல்லும்.
இந்த நிலையில் அசோக் கெலோட்டுடன் சசி தரூர் போட்டி என்ற செய்தியை படித்தால் சிரிப்பு வராதா என்ன?
பிகு: நிஜமாகவே தலைவர் தேர்தல் நடந்து இருவரில் ஒருவர் தலைவரானால் அது காங்கிரஸ் கட்சிக்கு நல்லது.
No comments:
Post a Comment