Saturday, September 24, 2022

உக்ரைனில் என்ன நடக்கிறது?

 


வாரம் ஒரு நூல் அறிமுகம்

 

04.09.2022 : உக்ரைனில் என்ன நடக்கிறது? ஆசிரியர் தோழர் .பா.சிந்தன்.

 

அறிமுகம்எஸ்.ராமன், வேலூர்

 

நூல் அறிமுகம்

 

நூல்                           : உக்ரைனில்  என்ன நடக்கிறது?

ஆசிரியர்                :  .பா.சிந்தன்

வெளியீடு               : பாரதி புத்தகாலயம்,

                                       சென்னை – 18

விலை                      : ரூபாய் 100.00

 

உக்ரைன்ரஷ்ய போர் துவங்கிய நேரத்தில் அப்போரின் பின்னணி குறித்து தோழர் .பா.சிந்தன், முக நூலில் தொடர்ச்சியாக எழுதிய குறிப்புக்களின் தொகுப்பே இந்நூல்.

 

உக்ரைன் போரை புரிந்து கொள்ள வேண்டுமெனில் ஃப்ரான்ஸிஸ் ஃபுகியாமா எழுதியதி எண்ட் ஆப் தி ஹிஸ்டரி”  மற்றும் பிரெசின்ஸ்கீ எழுதியதி கிராண்ட் செஸ்போர்ட்ஆகிய நூல்களை படிக்க வேண்டுமென்று ஆசிரியர் துவக்குகிறார். என்ன சொல்லப்பட்டுள்ளது அந்நூல்களில்? அமெரிக்கா மட்டுமே உலகின் ஒரே பேரரசாக இருக்க வேண்டுமெனில் ரஷ்யாவை தனிமைப்படுத்த வேண்டும். அதற்கு பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளை தன் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று உபதேசிப்பது அந்த நூல்கள்.

 

சோவியத் யூனியனின்சிதைவை விவரிக்கும் இரண்டாவது அத்தியாயம், நேடோ அமைப்பை விரிவாக்க மாட்டோம் என்று கோர்ப்பசேவிற்கு அளித்த உத்தரவாதத்தையும் அந்த உறுதிமொழி எப்படியெல்லாம் தொடர்ந்து மீறப்பட்டது என்பதையும் விளக்குகிறது.

 

சிரியா போரில் சிதைந்து போக அமெரிக்கா ஆசைப்பட்டதற்குஇரான் பைப்லைன்என்ற திட்டத்தின் மூலம் இரானிலிருந்து இராக், சிரியா வழியாக ஜெர்மனிக்கு குழாய் வழியாக எரிபொருள் செல்லும் திட்டம் அமலானால் ஐரோப்பாவில் எரிபொருள் விலை குறைந்து விடும் என்பதையும் தகர்க்கத்தான் என்பதை அடுத்தடுத்த அத்தியாயங்களில் விரிவாக எழுதுகிறார்.

 

இத்திட்டத்திற்கு மாற்றாக ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு பால்டிக் கடல் வழியாகநார்த் ஸ்ட்ரீம்என்ற திட்டத்தின் மூலம் குழாய் வழியாக இயற்கை எரிவாயு எடுத்துச் செல்லப்பட அது ஐரோப்பிய நாடுகளுக்கும் பலனளித்தது. ரஷ்யாவின் பொருளாதாரம் மேம்படவும் வழிவகுத்தது. இத்திட்டத்தால் இரண்டு நாடுகள் எரிச்சலுற்றது. அவை உக்ரைனும் அமெரிக்காவும் என்று எழுதுகிற ஆசிரியர் உக்ரைன் வழியாக குழாய்கள் செல்லாததால் அதற்கும் இத்திட்டத்தில் எந்த விதமான பங்கேற்பும் இல்லாததால் அமெரிக்காவும் எரிச்சலுற்றது என்பதையும் சொல்கிறார்.

 

அடுத்து வரும் அத்தியாயங்களில் உக்ரைனின் வரலாறு குறித்த சிறிய அறிமுகமும் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த பின்பு அங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், நிலையற்ற தன்மை, அமெரிக்க தலையீடுகள், இன, மொழி உணர்வுகளை உசுப்பி விடும் அரசியல்  கட்சிகள், புதிய நாஜிகளாக வன்முறையில் ஈடுபடும் இயக்கங்கள், நேடோவுக்கு கை நீட்டிய ஆட்சியாளர்கள், ஒடுக்கப்பட்ட கம்யூனிஸ்டுகள் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டிய பல செய்திகள், உண்மைகள் அடங்கியுள்ளதுஅவற்றை படிக்கும் போதுதான் போருக்கான காரணம் யாரென்பது புரியும்.

 

இரண்டாவது நார்த் ஸ்ட்ரீம்திட்டத்தை துவங்கும் நேரத்தில் ரஷ்யாவை மற்ற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

 

யார் பக்கம் நிற்க வேண்டும்?” என்ற கேள்வியை எழுப்புகிற கடைசி அத்தியாயம் போரினால் கடுமையாக பாதிக்கப்படுபவர்கள் உக்ரைனின் எளிய மக்களேயன்றி ஆட்சியாளர்களோ, செல்வந்தர்களோ  “ரஷ்யா போரை நிறுத்த வேண்டும்என்று சொல்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், இப்போருக்கான இதர காரணிகளையும் நிறுத்த வேண்டும் என்பதையும் சேர்த்து சொல்ல வேண்டும் என்று முடிக்கிறார்

 

தோழர் .பா.சிந்தன் நேரடியாக எழுதிய முக்கியமான நூல் இது. அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

 

செவ்வானம்

 

No comments:

Post a Comment