காஷ்மீரிலிருந்து இங்கே வந்திருக்கிறார்கள், அஸ்ஸாம் போன்ற வட கிழக்கு மாநிலங்களிலிருந்து வந்துள்ளனர். குஜராத்திலிருந்தும் வந்துள்ளனர். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்துள்ளனர். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தால் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, தோழமையை கட்ட முடியுமென்றால் இந்தியாவால் ஏன் முடியாது?
இங்கே ஹிஜாப் அணிந்த பெண்கள் உள்ளனர். பெரிய பொட்டுக்களை அணிந்த பெண்களும் இருக்கின்றனர். எந்த ஒரு மத அடையாளமும் இல்லாத பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். இங்கே நம் சங்கத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க முடியுமென்றால் இந்தியாவில் இது ஏன் முடியாது?
இங்கே பல மதங்களை பின்பற்றக் கூடியவர்கள் உள்ளனர். மத நம்பிக்கை அற்றவர்களும் உள்ளனர். நம்மால் ஒருவர் இன்னொருவரை பரஸ்பரம் மதிக்க முடியும் என்றால் இந்தியாவால் மட்டும் ஏன் முடியாது?
இப்படிப்பட்ட நிலைமை வராமல் தடுப்பவர்கள் யாரென்பதை அடையாளம் கொள்ள வேண்டியதும் மாற்றத்தை உருவாக்க வேண்டியதும் நம் முக்கியமான கடமை.
No comments:
Post a Comment