Friday, September 23, 2022

அசிங்கமா போயிடுச்சு மாலன்.


 
மாலனுடன் மூன்று மோதல்

 மாலன் என்னுடைய நட்புப்பட்டியலில் இல்லாவிட்டாலும் அவர் யாருடைய பதிவிற்காவது பின்னூட்டம் இட்டால் முகநூல் எனக்கு மெனக்கெட்டு நோட்டிபிகேஷன் அனுப்புகிறது.

 கடந்த வாரம் அப்படி அவர் போட்ட மூன்று பின்னூட்டங்களுக்கு நான் எதிர்வினையாற்றினேன்.

 கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் விலை கொடுத்து வாங்கியதைக் கண்டித்து ப.சிதம்பரம் எழுதிய பதிவிற்கு “ விற்பனையாகக் கூடிய பொருளைத்தானே எல்லோரும் வாங்குவார்கள். தாஜ் மஹாலை யாரால் வாங்க முடியும்?” என்று மேதாவித்தனமாக கேட்டிருந்தார்.

 

“ஜனநாயக அமைப்புக்களையும் ஜனநாயக விழுமியங்களையும் உங்கள் தலைவர் சிதைத்தது போல உங்கள் தலைவரால் தாஜ் மஹாலையும் அழிக்க முடியும்” என்று பதில் போட்டேன்.

  


இதற்கு அவரிடமிருந்து பதில் இல்லை.

 அடுத்து கவிஞர் புதியமாதவி சங்கரன் அவர்கள் இன்றைய திமுகவினர் அறிஞர் அண்ணாவை மறந்து விட்டார்கள் என்ற பதிவிற்கு திமுகவினர் பல்டி அடிப்பவர்கள் என்று பின்னூட்டம் எழுதியிருந்தார்.

 


இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மார்க்சியம் தேவைப்படுகிறது என்று எழுதி விட்டு இப்போது நீங்கள் மோடிக்கு காவடி தூக்குகிறீர்களே, அது போலவா என்று கேட்டேன்.

 மூத்தவர் இதற்கும் பதில் சொல்லவில்லை.

 அடுத்தபடியாக சவுக்கு சங்கர் கைது தொடர்பான ஒரு பதிவிற்கு “விமர்சனம் வேறு, அவதூறு வேறு: என்றொரு வியாக்யானம் கொடுத்திருந்தார்.

 


நீங்கள் சொல்லும் இதே நீதி குருமூர்த்திக்கும் பொருந்தும் அல்லவா என்று அவரை வினவினேன். இன்னும் சில பேர் கழுவி கழுவி ஊற்றினார்கள்.

 

எதற்கும் பதில் சொல்லாமல் மாலன் அடுத்த பின்னூட்டம் போடச் சென்று விட்டார்.

 உங்க பயம் பிடிச்சிருக்கு மாலன் . . .

 பிகு: திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா குறித்த ஒரு பதிவில் மாலனார் போட்ட பின்னூட்டத்திற்கு ஒருவர் இன்னொருவரை கோர்த்து விட அவரோ பதில் சொல்லும் அளவுக்கு மாலன் வொர்த் இல்லைன்னு எழுதிட்டாரு.

 




அப்படி வொர்த்தில்லாத ஆள்கிட்டயா இத்தனை நாள் நான் சண்டை போட்டுக்கிட்டு இருந்தேன்.

 ஒரே அசிங்கமா போயிடுச்சு மாலன்.

No comments:

Post a Comment