நேற்று வேலூரில் பார்த்த
சுவரொட்டி கீழே உள்ளது.
காலையில் கைதாகி கல்யாண
மண்டபத்தில் காத்திருந்து போலீஸ் கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு மாலையில்
வீடு வந்து சேரும் போராட்டத்திற்கெல்லாம் ஏதோ பலான சாமியார் பிரேமானந்தா பெற்ற இரட்டை
ஆயுள் தண்டனை ரேஞ்சிற்கு பில்ட் அப் கொடுத்து
“விடுதலை செய்” என்று வெட்டியாய் போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டும் அளவிற்கு
பாஜகவிடம் காசு உள்ளது.
இந்த போஸ்டரின் முக்கிய நோக்கம் என்ன தெரியுமா?
அந்த கட்சிக்கு வேலூரில் 103 பேர் இருக்காங்களாம். அதைத்தான் இந்த மாதிரி போஸ்டர் அடிச்சு சொல்றாங்க!
பிகு 1 : ஸ்மார்ட் சிட்டி பணிகள் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை
தீர்க்க வேண்டும் என்பது அவர்கள் போராட்டத்தின் நோக்கம். ஸ்மார்ட் சிட்டி என்பதே ஒரு
தேவையில்லாத ஆணி. அதை கொண்டு வந்தது மோடி என்பதும் அதற்கான ஒப்பந்தங்களை இறுதி செய்ததும்
எடப்பாடி அரசுதான் என்பதும் பாஜக ஆட்களுக்கு தெரியாது போல!
பிகு 2 : ஸ்மார்ட் சிட்டி திட்டம் காரணமாக சாலைகள் படு கேவலமாக உள்ளது என்பது உண்மை. ஒன்றிய அரசு திட்டமா? எடப்பாடி சம்பந்தி ஒப்பந்தக்காரரா என்பதெல்லாம் மக்களுக்கு தேவையில்லாத ஒன்று. அவர்களின் கோபம் இயல்பாகவே ஒரு வருடமாக செயல்பட்டுக் கொண்டுள்ள/செயல்படாத மாநகராட்சி மீதுதான் திரும்பும். எனவே சாட்டையை கையிலெடுத்து ஒப்பந்தக் காரரை வேலை வாங்க வேண்டியது அவர்களின் பொறுப்புதான்
No comments:
Post a Comment