Saturday, September 24, 2022

மதுரை எய்ம்ஸ் - சங்கிகள் சமாளிக்க

 


மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணியில் 95 % முடிந்து விட்டதாக பாஜக அகில இந்தியத் தலைவர் நட்டா கதை விட்டு அசிங்கப்பட்டார்.

கட்டுமானப் பணிகள் துவங்குவதற்கான பூர்வாங்கப் பணிகள் 95 % முடிந்து விட்டதாகத்தான் அவர் கூறினார் என்று சங்கிகள் சமாளிக்க முயற்சிக்கிறார்கள்.


நட்டா சொன்னதை அப்படியே ட்விட்டரில் பதிவாக்கி அசிங்கப்பட்டதும் அதை அழித்த பாஜக ஐ.டி செல் மேதாவிகளுக்கு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்திருப்பார்கள் என்பது நினைவுக்கு வராமல் போய் விட்டது.

கட்டுமானப் பணியே தொடங்காத போது அதை மோடி எப்படி விரைவில் அர்ப்பணிப்பார் என்ற கேள்விக்கும் பதில் இல்லை.

அதனால்தான் சங்கிகளுக்காக நான் ஒரு ஆலோசனை கொடுத்துள்ளேன்.

 ரஜினிமுருகன் படத்தில் பஞ்சாயத்தில் சமுத்திரக்கனி அது உசிலம்பட்டி பக்கத்தில் உள்ள கொடிக்குளம் இல்லை, மேலூர் பக்கத்தில் உள்ள கொடிக்குளம் என்று சமாளிப்பது போல

நட்டாவும் நான் உபி மதுராவைத்தான் சொன்னேன் என்று சமாளித்துக் கொள்ளலாம்.

ஆமா, உபி மதுராவில எய்ம்ஸ் இருக்கா?


3 comments:

  1. முதல் நாள் முதல் கையெழுத்து நீட் விலக்கு .
    குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய்
    தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்படும் .
    சிலிண்டருக்கு மானியம் போலவா ?

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை, உற்பத்தி விலையைப் போல் ஒன்றரை மடங்கு கொள்முதல் விலை, ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு என்றெல்லாம் ஒரு அயோக்கியன் ஜும்லா வாக்குறுதி கொடுத்தது போல

      Delete
  2. ஆக ஒன்றியமும் மாநிலமும் ஒரே லட்சணம்தான் என்று சொல்லவர்றீங்க!!!!!!

    ReplyDelete