வேலூரில் இந்து முன்னணி
ஒட்டியுள்ள சுவரொட்டி கீழே உள்ளது.
முதலில் அவர்கள் ஆ.ராசாவை
குறை சொல்வதே அநியாயம். மக்களை நான்கு வர்ணங்களாக பிரித்து இழிவு செய்யும் மனு தர்மத்தின்
மீது கோபம் வராமல் அந்த இழிவை சுட்டிக்காட்டியவர்கள் மீது கோபப்படுவது அயோக்கியத்தனம்.
சில மாதங்கள் முன்பாக இதே விஷயத்திற்காக தோழர் தொல்.திருமாவளவன் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
இப்போது இலக்கு மாறி விட்டது. உண்மையிலேயே இவர்களுக்கு ரோஷம் வந்தால் ராஜஸ்தான் உயர்
நீதிமன்றத்தின் முன்பு அமைக்கப்பட்டிருக்கிற மனு சிலையை உடைக்க வேண்டும் அல்லது மனு
தர்மம் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்றாவது நிரூபிக்க வேண்டும். அதை அவர்களால் செய்ய
முடியாது.
இந்த சுவரொட்டி மிகவும்
அபாயகரமானது. பிரிவினையை தூண்டுகிறது. “சாமி கும்பிடும் இந்துக்கள்” என்று புதிய கேட்டகரியை
உருவாக்கி பக்தர்களை உசுப்பேற்றுகிறார்கள். இவர்களுக்கு என்ன பக்தர்கள் மீது பாசமா?
சாமி கும்பிடும் இந்துக்கள், சாமி கும்பிடாத இந்துக்கள் என்று இந்துக்களையே இரண்டாகப்
பிரிக்கும் இந்த கயவர்களா இந்துக்களை பாதுகாப்பார்கள்!
மோடி அரசின் பொருளாதார
நடவடிக்கைகளால், விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பகுதியினர் இந்துக்கள்தானே!
சாமி கும்பிடும் இந்துக்களுக்காக ஏதாவது தனி சலுகை கொடுத்துள்ளார்களா என்ன!
உண்மையைச் சொல்லி
இவர்களால் கட்சியை நடத்த முடியாது. ஆட்சியைப் பிடிக்க முடியாது. மோடி சொல்லும் கதைகளை
நம்ப தமிழ்நாட்டு மக்கள் தயாராக இல்லை. அதனால் கலவரத்தைத் தூண்டியாவது தேர்தலில் வெற்றி
பெற முடியுமா என்று பார்க்கிறது பாஜக.
இப்படியெல்லாம் அரசியல் செய்வதற்கு பதிலாக பாஜகவினர் பிச்சை எடுக்கலாம். அது கொஞ்சம் கௌரவமாக இருக்கும்.
பிகு: பிச்சை எடுப்பது
என்பதற்குப் பதிலாக இன்னும் ஒரு கடுமையான வார்த்தையைத்தான் முதலில் பயன்படுத்தி இருந்தேன்.
அதுதான் பொருத்தமான வார்த்தையும் கூட. என் தளத்தின் நாகரீகத்தைக் காக்க கடைசியில் வார்த்தையை
மாற்றி விட்டேன்.
No comments:
Post a Comment