Tuesday, September 6, 2022

வட போச்சே சங்கிகளா?

 


அடுத்த இங்கிலாந்து பிரதமர் மற்றும் பழமைவாதக் கட்சியின் தலைவருக்காக நடந்த உட்கட்சி தேர்தலில் லிஸ் ஸ்ட்ரெஸ் வெற்றி பெற்று இந்திய வம்சாவழியினரான ரிஷி சுனக் தோற்றுப் போய் விட்டார்.

இதில் மகிழ்சியடையவோ வருத்தமடையவோ ஏதுமில்லை. எரிகிற கொள்ளிகளில் எல்லா கொள்ளிகளுமே மோசமான கொள்ளிகள்தான். முதலாளித்துவ, ஏகாதிபத்திய சிந்தனையுடைய கட்சியின் தலைவரோ, பிரதமரோ யாராக இருந்தாலும் அதனால் சாமானிய மக்களுக்கோ இந்தியா போன்ற நாடுகளுக்கோ எந்த பயனும் இல்லை. அதிலும் இந்த அம்மையார் போரீஸ் ஜான்சனின் தீவிரமான அனுதாபி. சோஷலிச சிந்தனை கொண்ட தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெர்மி கொர்பைனை நசுக்கியவரே என்று நேற்று கூட புகழாரம் சூட்டியவர்.

பின் ஏன் இந்த தலைப்பு? எதற்கு இந்த படம்?

ரிஷி சுனக் களத்தில் உள்ளார் என்ற செய்தியை அறிந்தது முதலே சங்கிகள் குதிக்க ஆரம்பித்து விட்டார்கள். இங்கிலாந்தில் இந்தியர் பிரதமராவது மோடியின் சாதனை என்பதில் தொடங்கி அவர் பிரதமரான பின்பு அவரும் மோடியும் இணைந்து எப்படி உலகத்தையே தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவார்கள் வரை கற்பனை உலகில் சஞ்சாரித்தார்கள்.

மீன் கடை லாபத்தின் மூலம் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டு அவர் அம்மாவை தன் மாமியாராக்க வேண்டும் என்று தொலைநோக்குப் பார்வையோடு திட்டம் போட்ட வடிவேலுவின் ரேஞ்சில் இருந்தது அவர்கள் கட்டுக்கதை. 

கடைசியில் இப்படியாகிவிட்டது. 

சங்கிகள் இன்று துக்கம் அனுஷ்டிப்பார்கள் என்று நம்புகிறேன். 

No comments:

Post a Comment