Saturday, September 3, 2022

ஏனோ நினைவுக்கு வந்தது சாரு . ..

 


ஆஜானும் சாரு நிவேதிதாவும் கூட்டணி அமைத்துள்ளார்கள். மோடியும் மம்தாவும் அமைக்கும் கூட்டணீ போல ஆபத்தான கூட்டணி இது.

நிற்க

ஆஜான் சாரு நிவேதிதாவுக்கு விருது அளிக்கவுள்ள செய்தியை படித்தவுடன் ஏனோ ஐந்தாண்டுகளுக்கு முன்பு எழுதிய ஒரு பதிவு நினைவுக்கு வந்தது. 

இதோ அது மீண்டும்.


Monday, January 16, 2017




நேற்று ஒரு அவசர அலுவலாக சென்னை போக வேண்டியிருந்தது. அந்த வேலை முடிந்ததும் இரண்டாவது முறையாக புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். முதல் முறை சென்ற அனுபவம் பற்றி இன்னும் எழுதவில்லை. ஆனாலும் இந்த இரண்டாவது முறை பற்றி எழுதுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

நான் சென்ற மாலை நேரத்தில் வம்சி அரங்கில் அப்போதுதான் ஒரு புத்தக வெளியீட்டு விழா முடிந்திருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவருமான தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு அவர்கள் எழுதிய நூலின் வெளியீட்டு விழா முடிந்திருந்த நேரம் அது.

அரங்கில் நல்ல கூட்டம் இருந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர்கள் இருந்தார்கள். மலையாள எழுத்தாளர் பால் சக்காரியா அரங்கில் அமர்ந்திருந்தார். ஈழ எழுத்தாளர் ஷோபா சக்தி வந்திருந்தார். பால் சக்காரியாவுடன் சிலர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஷோபா சக்தியுடன் சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அங்கே அரங்கில் இன்னொரு பிரபல எழுத்தாளரும் இருந்தார். அவர் தன்னை பால் சக்காரியாவுடன் புகைப்படம் எடுக்கச் சொன்னார். அதன் பின்பு அந்த பிரபல எழுத்தாளரை யாருமே கண்டு கொள்ளவில்லை. அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் யாரும் முன்வரவில்லை.

நான்கைந்து நிமிடங்கள் அங்கேயே நின்று விட்டு அப்படியே மெதுவாக மெதுவாக தளர்ந்த நடையோடு அங்கிருந்து நழுவி விட்டார். மனைவி இறந்த செய்தியை சொன்னவுடன் எஸ்.பி.சௌத்ரி ஒரு நிமிடம் தடுமாறுவாரே அது போல அவர் அங்கிருந்து நடந்து போன காட்சியைப் பார்க்கையில் மிகவும் வருத்தமாக இருந்தது.

ஈழ எழுத்தாளனையும் மலையாள எழுத்தாளனையும் கொண்டாடி தமிழ் எழுத்தாளனுக்கு முக்கியத்துவம் அளிக்காத தமிழ்ச் சமூகம் உருப்படுமா என்று அவர் அடுத்து எழுதுவாரே என்பதை நினைக்கையில் இன்னும் வருத்தமாக இருக்கிறது.

அந்த எழுத்தாளர்












சாரு நிவேதிதா.

No comments:

Post a Comment