Thursday, September 1, 2022

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்.

 


இன்று எல்.ஐ.சி யின் 66 வது உதய தினம்.

எப்போதும் போல இன்றும் இந்தியா முழுதும் எல்.ஐ.சி தினம் அதன் ஊழியர்களால், அதிகாரிகளால், வளர்ச்சி அலுவலர்களால், முகவர்களால் உற்சாகமாக, உணர்வு பூர்வமாக கொண்டாடப்பட்டது.

இந்தியாவில் வேறு எந்த நிறுவனத்திலாவது இது போல ஊழியர்கள் தங்கள் இல்ல விழா போல தங்கள் நிறுவனத்தின் பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்களா என்பது தெரியாது.

எங்களைப் பொறுத்தவரை எல்.ஐ.சி எங்கள் வாழ்வோடு கலந்தது. 66 வது வருடத்தையும் தாண்டி நூற்றாண்டு கொண்டாடும். அப்போதுள்ள ஊழியர்களும் அன்றைக்கும் இதே உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள்.

ஏனென்றால் எங்கள்  வாழ்வோடு கலந்தது எல்.ஐ.சி. LIC is the ideological commitment of AIIEA என்று எங்கள் மூத்த தலைவர் தோழர் அமானுல்லா கான் சொல்வார். அதுதான் இன்றைய கொண்டாட்டங்களில் வெளிப்பட்டது. வெறும் கொண்டாட்டத்தில் மட்டுமல்ல, எல்.ஐ.சி யை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்கும் இயக்கங்களிலும் வெளிப்படும்.

மூன்றரை சதவிகித பங்குகள் விற்கப்பட்டதால் எல்.ஐ.சி மீதான உடமை உணர்வு மாறி விடுமா என்ன?

 சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையாதல்லவா !!!!

6 comments:

  1. எல் ஐ சி பங்கு விலை ஒரு வருடத்தில் 30 முதல் 40% வரை சரிவு. அதவாது எல் ஐ சி நட்டத்தில் இயங்குகிறது . இதனால் எல் ஐ சியில் ஆள் குறைப்பு செய்து நட்டத்தை குறைக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா, பங்கின் விலைக்கும் நிறுவனத்தின் செயல்பாட்டுக்கும் ஸ்னானப் ப்ராப்தி கூட கிடையாது. எல்.ஐ.சி யின் வளர்ச்சியும் வணிகமும் சிறப்பாகவே உள்ளது. பங்கு விலை சரிய பங்குச்சந்தை தரகர்கள், அன்னிய நிதி நிறுவ்ன முதலீட்டாளர்கள் ஆகியோரும் உலகெங்கும் பங்குச் சந்தை சரியும் வேளையில் பங்கு விற்பனை செய்த முட்டாள் மோடி, நிர்மலா கூட்டணியுமே காரணம். ஊழியர்கள் மீதான உமது காழ்ப்புணர்வை குறைத்துக் கொள்ளும்

      Delete
    2. உலகு எங்கும் பங்கு சந்தை சரிகிறது. ஆனால் இந்திய பங்கு வர்த்தகம் சிறப்பாகவே உள்ளது. இதே கால கட்டத்தில் HDFC LIFE share விலை 12% உயர்ந்து உள்ளது. ஆகவே உங்களின் வாதம் தவறானது. பங்கின் விலையை தீர்மானிப்பது எல் ஐ சியின் தணிக்கை அறிக்கையை தான். சிறப்பான நிறுவனவனங்களின் பங்குகள் என்றும் குறைவதில்லை. HDFC lifel 2 ஆட்கள் செய்யும் வேலையை எல் ஐ சி 12 ஆட்களை வைத்து செயகிறது. எல் ஐ சி போன்ற நிறுவனங்கள் ஆள் குறைப்பு வி ஆர் எஸ் என செல்லும் நாட்கள் தூரம் இல்லை.

      Delete
    3. உலகளாவிய fortune 500 companyகளில் முதல் இந்தியக் கம்பெனியாக தேர்வடைந்துள்ள LIC யை நஷ்டத்தில் இயங்குவதாக கூறினால் மோடி ஆட்சி இந்தியாவை திவாலாக்கியதாக அர்த்தம்

      Delete
    4. சரியான விளக்கம் இதனை விளக்கும்

      Delete
    5. பங்குச்சந்தை மாயையில் மூழ்கியுள்ள செம்பியனுக்கு அறிவுக்கண்கள் திறந்திட வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். அப்போதாவது ஊழியர்கள் மீது காழ்ப்புணர்வு கொண்ட காமலைக் கண்களும் குணமாகட்டும்

      Delete