இப்போதுள்ள ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு, ஏற்கனவே ICU வில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்த அரசாங்கம்.
தற்போதைய முதலமைச்சர் அசோக் கேலோட் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற பின்னணியில் அங்கே அரசியல் காட்சிகள் மாறிக் கொண்டிருக்கின்றன.
அசோக் கேலோட் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று முரண்டு பிடித்தார்.
பிறகு நேற்று நடந்தேம்.எல்.ஏ க்கள் கூட்டத்தில் அவர் ஆட்கள் கலந்து கொள்ளாமல் சச்சின் பைலட்டை முதலமைச்சராக்கினால் நாங்கள் ராஜினாமா செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
"அரச மரத்தையே சுற்றி வரலை, பொறக்கற குழந்தைக்கு வெங்கட சுப்ரமணியன் என்று பேர் வச்சானாம்"
என்ற கதையாக காங்கிரஸ் தலைவர் தேர்தலே நடக்கலை. அதுக்குள்ள இப்படி ஒரு கலாட்டா!
அப்படி நடந்து அசோக் கெலோட் தலைவரான அவருக்கு கிடைக்கிற முதல் பரிசாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசோட கவிழ்ப்பாக இருக்கலாம்.
யதார்த்த நிலைமையை புரிந்து கொள்ளாத காங்கிரஸ் உருப்படுமா என்பது சந்தேகம்தான் . . .
No comments:
Post a Comment