நேற்றைய ஆங்கில இந்து
இதழில் படித்த செய்தி.
20 டன் ஆப்பிளை ஏற்றிய
5000 லாரிகள் (மொத்தம் பத்தாயிரம் டன் ஆப்பிள்கள்) மூன்று நாட்களாக ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில்
சிக்கி தவிக்கின்றன. கிட்டத்தட்ட அதே அளவு ஆப்பிள்கள் தோட்டங்களிலும் அவல நிலையில்
உள்ளனவாம். அவை அழுகிப் போனதால் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் இழப்பு என்று சொல்கிறது
செய்தி.
போக்குவரத்து நெரிசலை
சரி செய்ய ஜம்முகாஷ்மீர் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குளிர்சாதனக்
கிடங்குகளில் ஆப்பிள்களை அனுப்ப வேண்டும் என்பதற்காக அரசு நிர்வாகம் செய்கிற சதி என்று
விவசாயிகள் குற்றம் சுமத்துகிறார்கள்.
மிகப் பிரம்மாண்டமான
குளிர்சாதனக் கிடங்குகளை மோடியின் முதலாளி அதானி கட்டியுள்ளார் என்ற செய்தியை நினைவு
படுத்திக் கொண்டு இந்த செய்தியை மறுபடியும் படியுங்கள்.
காஷ்மீர் ஆப்பிள்
விவசாயிகளின் கண்ணீரில் அதானியின் செல்வத்தை பெருக்கப் பார்க்கிறார்கள்.
No comments:
Post a Comment