பாபுலர் ஃப்ரண்ட் அமைப்பிற்கு ஐந்தாண்டுகள் தடை விதித்துள்ளது ஒன்றிய அரசு.
மோடியைக் கொல்ல திட்டமிட்டதாக அதற்காக கதை கட்ட தொடங்கியுள்ளனர். இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை சந்தேகிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசே நினைக்க வைக்கிறது.
அண்ணல் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்ப்டே உட்பட பல மனித உரிமை செயற்பாட்டாளர்கள் UAPA சட்டத்தின் படி கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். மோடியை கொலை செய்ய திட்டமிட்டார்கள் என்பதுதான் இவர்கள் மீதான குற்றச்சாட்டு.
பிரதமரை கொலை செய்ய திட்டமிட்டவர்கள் மீது வழக்கு தொடுத்து அவர்களுக்கு தண்டனை வாங்கித் தந்தால்தானே மற்றவர்களுக்கு அது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்!
ஆனால் இன்று வரை அந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யவில்லை. ஒன்றிய அரசின் நோக்கம், அவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதில்ல, சிறையி;ல் அடைத்து துன்புறுத்த வேண்டும் என்பதுதான். அதனால்தான் குற்றப்பத்திரிக்கை இன்னும் தாக்கல் செய்யவில்லை.
இதனால்தான் இந்த பிரச்சினையிலும் சந்தேகம் வருகிறது. சிறுபான்மை மக்களுக்கான ஒரு அமைப்பை தடை செய்து அவர்கள் மனதில் அச்சத்தை உருவாக்குவது மட்டுமே இத்தடையின் நோக்கம்.
நிற்க
தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான வழக்கில் அந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீதுதான் தாக்குதல் என்று ஆட்டுக்காரன் துள்ளியதையும் மறந்து விடக் கூடாது.
இப்போது இரண்டு உண்மைகள் வெளியாகியுள்ளது.
கோவையிலும் திருவள்ளூரிலும் சங்கிகளின் கார்களை சங்கிகளே கொளுத்திக் கொண்டு இஸ்லாமிய அமைப்புக்களின் மீது பழி போட்டுள்ளனர். மதக் கலவரத்தை தூண்ட முயற்சித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஒன்றிய அரசு எப்போது தடை செய்யப் போகிறது.
அவர்கள் இந்து முன்னணிதானே!
இந்து மக்கள் கட்சிதானே, எதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டுமென்று நீங்கள்
கேட்கலாம்.
இந்து முன்னணி,
இந்து மக்கள் கட்சி,
விஸ்வ இந்து பரிஷத்,
பஜ்ரங் தள்,
ஸ்ரீராம் சேனா,
பாரதீய ஜனதா
என்று வெவ்வேறு பெயர்களில்
இருந்தாலும் அவை ஆர்.எஸ்.எஸ் என்ற நச்சு மரத்தின் விஷக் கிளைகள்தான்.
No comments:
Post a Comment