ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து சுட்ட பதிவை கீழே பகிர்ந்து கொள்கிறேன்.
அந்த ஹெலிகாப்டர் சம்பவத்திற்கும் பத்து பைசா அளவு கூட பிரயோசனம் இல்லாத தகவலுக்கும் மோடி சொன்னதற்கும் முடிச்சு போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாலும் நீங்கள் மோடி பேசியது டோட்டல் வேஸ்ட் என்றுதான் சொல்லப் போகிறீர்கள்.
ஆல் ஆன்டி இந்தியன்ஸ்
சியாட்டில் நகரை சேர்ந்த ஒரு செய்தி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் பைலட் அவரது வேலையை முடித்துவிட்டு ஏர்போர்ட் திரும்பும் வழியில் திடீரென ஹெலிகாப்டரின் எலக்ட்ரிகல் சர்க்யூட்டில் கோளாறு ஏற்பட்டு அதன் வழிகாட்டும் கருவிகளும் கம்யூனிகேஷன் கருவிகளும் செயலிழந்துவிட்டது. கடுமையான மேக மூட்டம் காரணமாக visibility குறைந்து எங்கிருக்கிறோம் எந்த பக்கம் பறக்க வேண்டும் என்று ஒன்றும் புரியாமல் தவித்த நேரம் ஒரு உயரமான கட்டிட உச்சியில் இருந்த விளக்கு கண்ணுக்கு தெரிய அதன் மேல் குறைவான உயரத்தில் பறந்தார். நல்ல வேளையாக அதன் மொட்டை மாடியில் ஒரு ஆள் தம்மடித்துக் கொண்டு நின்றிருந்தான். பைலட் ஒரு பேப்பரை எடுத்து “நான் எங்கிருக்கிறேன்?” என்று எழுதி கீழே அவனிடம் காட்டினார். அவன் பதிலுக்கு அங்கே கிடந்த ஒரு போர்டை எடுத்து “ஹெலிகாப்டரில்” என்று எழுதி பைலட்டிடம் காட்டினான்.
Onnukum ubayagom illaama vaayilaeyae vada suduradhula gujju idiot'a adichuka mudiyaadhu.
ReplyDelete