Thursday, April 1, 2021

வானதி பேசியது ஆபாசமில்லையா?

 


 “லிப் சர்வீஸ் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு. உதட்டளவில் சேவை செய்வது என்பது ஒன்று. உதட்டுக்கு மட்டும் சேவை செய்வது. உதட்டுக்கு மட்டும் சேவை செய்யும் கமலஹாசனா என்னைப் பார்த்து துக்கடா என்பது?

 இந்த பேச்சு ஆபாசம் என்ற வரையறைக்குள் வராதா? மூத்த்த பத்திரிக்கையாளரைக் கூட கேட்டேன். அவர் வழக்கம் போல திமுகவை திட்டிக் கொண்டிருக்கிறாரே தவிர இதற்கெல்லாம் பதில் சொல்ல தயார் இல்லை. அவரது மௌனத்தையே அவரது ஒப்புதல் வாக்குமூலமாக எடுத்துக் கொள்கிறேன்.

 ஒரு காரணத்திற்காக கமலஹாசனை பாராட்டுகிறேன். துக்கடா என்று சொன்னால் எப்படிப்பட்ட வலி வரும் என்பதை வானதி அம்மையாருக்கு உணர்த்தியதற்காக.

 குடியுரிமைச்சட்டம் தொடங்கி பாஜக ஆட்சியின் அலங்கோலங்களுக்கு எதிராக போராடும் அமைப்புக்கள் அனைவரையுமே துக்கடா கும்பல் என்று பேசிய சிறுமதியாளர்கள் இவர்கள்தானே!

 பிகு: விஜயகாந்தை குடிகாரன் என்று AI சொன்னதற்கு விஜயகாந்த்    எதிர்வினையாற்றியது  போல கமலஹாசனும் வானதிக்கு எதிர்வினை ஆற்றியிருந்தால்  நிலைமை  இன்னும் ரசாபாசமாகி இருந்திருக்கும்.

 

No comments:

Post a Comment