Thursday, April 1, 2021

ரஜினி - விருது - தருணம்

 


தாதா சாஹேப் பால்கே விருது பெற்றமைக்கு ரஜினிகாந்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 

நிஜமாகவே சொல்கிறேன். அவரது நண்பர் போல "திரையில் தோன்றினாலே விருது" என்றெல்லாம் உள் குத்து இல்லாமல் சொல்கிறேன்.

ரஜினிகாந்த் என்ற நடிகரை எனக்கு பிடிக்கும். சூப்பர் ஸ்டார் என்ற பிம்பச் சிறையில் அடைபடுவதற்கு முந்தைய நடிகர் ரஜினியை.

அந்த நடிகர் இப்போதும் சில சமயம், பெரும்பாலும் காமெடிக் காட்சிகளில் வெளிப்படத்தான் செய்கிறார்.

ஆகவே அவருக்கு விருது கிடைத்ததில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஆனால் விருது கிடைத்த தருணம்தான் நெருடலாக இருக்கிறது. 

போன வருடமோ அல்லது இந்த வருடமோ விருது அளிக்கப்பட்டிருந்தால் இந்த நெருடல் ஏற்பட்டிருக்காது.

அவரே முத்து திரைப்படத்தில் சொன்னது போல "கிடைக்கிறது கிடைக்காம போகாது, கிடைக்காம போறது கிடைக்காது"

அதனால்

இன்னும் ஐந்து நாட்களில் தமிழகம் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் விருது அறிவித்துள்ளதில் எந்த அரசியல் உள் நோக்கமும் இல்லை என்று யார் சூடமேற்றி சத்தியம் செய்தாலும் நம்ப முடியாது. 

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று வோட்டுக்காக அலையும் பாஜக, ரஜினிக்கான விருதை சர்ச்சையாக்கி விட்டது.

1 comment:

  1. Nadikavae theriyaadha mental nadiganukku ellaam Dada saheb phalke award'aa?
    Mental rajinikku kudukkurathuku pathilaa Sam Anderson'ku kuduthu irrukalaam.

    ReplyDelete