தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களுக்கு இரங்கல் செய்தியை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடலாம் என்று சென்ற போது பார்த்த நான்கு பின்னூட்டங்களை மட்டும் கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
மேற்கு வங்கத் தேர்தலில் அனுதாப ஓட்டு வாங்குவதற்காக
இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டாயா என்று கேட்கும் இந்த நபர் ஒரு வேளை ஏதோ
அரசியல் சாரா அரசியல் கோஷ்டியோ என முதலில் நினைத்தேன். மோடி, அமித்து, ரவிசங்கர் பிரசாத்,
நட்டா உள்ளிட்ட சீனியர் சங்கிகளை பின்பற்றும் சங்கி என்பது அந்தாளின் ட்விட்டர் பக்கத்திற்கு
போன பின்பே புரிந்தது.
ஒரு மரணத்தின் போது கூட இவர்கள் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் என்பது
எனக்கு அதிர்ச்சியோ ஆச்சர்யமோ இல்லை.
மகாத்மா காந்தியை திட்டம் போட்டு கொன்று விட்டு
இனிப்பு கொடுத்து கொண்டாடிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வளர்ப்புக்கள் வேறெப்படி இருப்பார்கள்!
நல்ல சங்கின்னு யாருமே கிடையாதா?
ReplyDeleteமேலே உள்ள சங்கிகளின் பின்னூட்டங்கள் பார்த்துமா இப்படி ஒரு கேள்வி?
Deleteசரி, விரிவாகவே பிறகு எழுதுகிறேன்.