Wednesday, April 7, 2021

ஆஜானோடு லச்சூவையும் ஜெயிலில் . . .

 



 ஆஜானின் குண்டர் படை பிரதான தளபதி லச்சுமி மணிவண்ணன் எழுத்தாளர்கள் அரசியல் நிலை எடுக்கிறார்கள் என்று பொங்கியுள்ளார்.

 அவர் சொல்லியதில் சில முத்துக்கள்.

 எழுத்தாளர்கள், கவிஞர்கள் தமிழ் நாட்டில் கூட்டமாக சிந்திக்கிறார்கள். தி.மு.கவிற்கு வாக்களிக்குமாறு புரபைல் புகைப்படம் வைத்திருக்கிறாரகள். இதுவொரு கேவலம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. பொதுமக்கள், பிரஜைகள் எழுதுகிறவன் என்றால் தி.மு.க காரன் என்று எண்ண மாட்டார்களா? அப்படியென்றால் எப்படி மதிப்பார்கள் ?

 ஐய்யா லச்சூ, வெளிப்படையாக அவர்கள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை சொல்கிறார்கள். இதிலே உமக்கு ஏன் நோகுது?

 

எங்கள் மகத்தான தலைவர் தோழர் சுனில் மைத்ரா எழுதியதைத்தான் உமக்கு சொல்ல வேண்டியுள்ளது.

 “தொழிற்சங்கம் அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற உபதேசத்துடன் ஆட்சியாளர்கள் ஓடி வருகிறார்கள். தொழிலாளர்களுக்கு அரசியல் கூடாது, மாணவர்களுக்கு அரசியல் கூடாது, பெண்களுக்கு அரசியல் கூடாது, வாலிபர்களுக்கு அரசியல் கூடாது, விவசாயிகளுக்கு அரசியல் கூடாது என்றெல்லாம் உபதேசிக்கிறார்கள்.

 பின் அரசியலில் யார் இருக்க வேண்டும்? பெரும் செல்வந்தர்களும் முதலாளிகளுமா? அயோக்கியர்களும் திருடர்களுமா? தங்களைத் தவிர வேறு யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற மோசமான சிந்தனை அது.

 நாம் பேசுவது வர்க்க அரசியல். தொழிலாளி வர்க்க அரசியல். உழைக்கும் வர்க்கத்திற்கு நன்மை எப்படி வரும் என்று பேசுகிற அரசியல். போராடக் கூடிய அனைவரையும் ஒன்று படுத்தக் கூடிய அரசியல்.”

 எழுத்தாளன் அரசியல் பேசக் கூடாது என்றால் பிறகு யார் அரசியல் பேச வேண்டும்?

 

நீர் சொல்லும் எழுத்தாளர்கள் எல்லாம் நேரடியாக பேசுகிறார்கள். ஆனால் நீர் பேசுவது மட்டும் என்ன? திமுகவிற்கு எதிரான அரசியல், மத வாத அரசியல், மத வெறியை தூண்டும் அரசியல். உங்க ஆஜான் இப்போதுதான் “இந்துவாக உணர்தல்” என்று பாஜக அரசியலுக்கு வால் பிடிக்கிறார்.

 

உங்களத்தான்யா எவனும் மதிக்க மாட்டான்.

 

நான்கு தினசரிகளில் ஒரே நாளில் ஆளுகின்ற தி.மு.க அல்லாத அரசு சிறந்த உத்தியுடன் ஒரு விளம்பரம் செய்கிறது.

 ஒரு விளம்பரத்தை செய்தி போல் தரும் கேவலத்தை சிறந்த உத்தி என்று சொல்ல உமக்கு நா கூசவில்லையா?

 எழுத்தாளர்கள் விளம்பரம் வந்த இதழைத் தீயிட்டு கொளுத்துகிறார்கள்.

 இதை சிறந்த உத்தி என்று சொல்லும் உம்மை கொளுத்தவில்லை என்று மகிழ்ச்சியடையவும்.

 ஊழலில் திளைத்த ,நுட்பமான ஊழல்களுக்குப் பெயர்போன ,தமிழ் நாட்டுக்கு எதிரான அனைத்து திட்டங்களிலும் மாறுபாடின்றி ஒப்பமிட்டுக் கொடுத்த கட்சியின் சார்பாக நின்று கொண்டிருக்கிறார்கள்.எவனோ ஒருவன் என்னை நோக்கி இவர்களில் ஒருவனா நீ எனக் கேட்பானேயாகில் ,அது எழுத்தாளனாக எனக்கு எவ்வளவு பெரிய தலைகுனிவு ?

 ஆமாம். நீங்கள் ஆதரிக்கும் கட்சியின் தலைவிதான் சொத்து குவிப்பு வழக்கின் A 1 என்பது நினைவில் உள்ளதல்லவா?

 

இதில் கிறிஸ்தவ செயல்திட்டம் ஒளிந்திருக்கிறது.தமிழ் எழுத்தாளர்கள், கவிகள் இவர்களுடைய நடவடிக்கைகள் பற்றி வெளிப்படையாகப் பேசுவோம் எனில் ,இவர்களை கிறிஸ்தவ செயல் திட்டம் கொண்டவர்கள் என்பதே சரி. இவர்கள் பேசுகிற பல கருத்துகளின் அடிநாதம் கிறிஸ்தவ செயல்திட்டங்களே அன்றி வேறில்லை.இவர்களின் முற்போக்கு அதன் மாஸ்க். தமிழ் தேசியம் பாதிரிகளின் புதிய முலாம்,சாயம். நாட்டார் தெய்வ ஆதரவு கபட நாடகம்.ஒன்றை ஒன்று எதிரெதிராக முன்னிறுத்தும் முயற்சி. சைவ சமய நிலைபாடு பிளவு அரசியலின் புது முயற்சி. இவையெல்லாமே கிறிஸ்தவம், தான் போய் சேர எண்ணும் நாடுகளில் வழக்கமாகச் செய்து வரும் பாசாங்குகள்.இன்று சாமானியர்கள் வரை இதனையெல்லாம் அறிந்து கொண்டிருக்கிறார்கள். வைகோ தொடங்கி திருமுருகன் காந்தி வரையில்,ராமசாமி தொடங்கி உதயகுமார் வரையில்,குளத்தூர் மணி தொடங்கி சீமான் வரை யார் இவர்கள் என்பதை மிகவும் நன்றாக சாமானியன் வரையில் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

 

ஒரு சூழலில் எழுத்தாளர்களும் ,கவிகளும் கிறிஸ்தவ செயல்திட்டங்களுக்கு ஒரே சார்பாக நின்று அணி வகுப்பார்கள் எனில் அதனை வெளிபடுத்தியாகவேண்டியது மிகவும் முக்கியமான வேலை.

 கடைசியில  நீ எங்க வந்து நிக்கற பார்த்தியா! இலுமினாட்டிங்க சதி என்று முன்னாடி ஓடிக் கொண்டிருந்த கதைக்கு இப்போது பட்டி, டிங்கரிங் பார்த்து மதச் சாயம் பூசியிருக்க!  மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பது கூட கிறிஸ்துவ செயல் திட்டம்தானா? உண்மையைச் சொல்லனும்னா இப்போ நீ எழுதியுள்ளதுதான் ஆர்.எஸ்.எஸ் செயல் திட்டம். ஏம்பா லச்சு, நீ எழுதியுள்ளது அபாண்டம் என்றும் முட்டாள்தனம் என்று அயோக்கியத்தனம் என்பதாவது உமக்கு தெரிகிறதா இல்லையா?

 ஆமாம், வழக்கமாக உங்க ஆஜான் இஸ்லாமியர்களையும் சேர்த்துத்தானே பழி போடுவார், நீ ஏன் அவங்களைப் பத்தி எதுவும் எழுதலை?

 இப்படி மத வெறியை தூண்டுவதே உனக்கும் உங்க ஆஜானுக்கும் பிழைப்பா போயிடுச்சு.

 அந்தாளை கைது செய்யனும்னு ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன். உங்க ஆஜானை மட்டுமல்ல, உம்மையும் சேர்த்துத்தான் கைது செய்யனும்.

 நீங்க எல்லாம் வெளியே இருந்தா மக்களுக்கு பிரச்சினை. ரேபிஸ் பரவும்.

 பிகு : இவ்வளவு யோக்கியமாக பேசற இந்த ஆளோட மனைவி 2016 ல் உள்ளாட்சித் தேர்தலில் வார்ட் கவுன்சிலர் பதவிக்கு திமுக கவுன்சிலரா போட்டி போட்டிருக்காங்க. அதை கேட்ட ஒருவரிடம் நானே திமுக வட்டச் செயலாளரா இருந்தேன்னு பதில் சொல்லியிருக்காரு. இதில அவங்களுக்குத்தான் நான் தேவை, எனக்கு அவங்க தேவை இல்லைன்னு வெட்டி பந்தா வேற.

 


அன்னிக்கு சன் டிவில வேலை பார்த்துட்டு இன்னிக்கு திமுக வெறுப்பை கக்கும் மாலன் மாதிரியே இருக்கே!

3 comments:

  1. தோழர் என்ற வார்த்தையே அருவெறுப்பாக உள்ளதாமே!

    ReplyDelete
  2. லட்சுமி மணிவண்ணன் முகநூல் பக்கம் பார்க்கவும்

    ReplyDelete