Monday, April 5, 2021

தேர்தல் பிரச்சாரம் அல்ல, ஆனால்

 



 முக நூல், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரச்சாரமோ அல்லது வாக்களிக்குமாறோ கேட்கக் கூடாது என்றும் அப்படி கேட்டால் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை என்ற செய்தி உலவிக் கொண்டிருக்கிறது.

 ஆகவே அதை மதித்து யாருக்கும் ஆதரவு கேட்டு இந்த பதிவை எழுதவில்லை.

 சில சம்பவங்கள் என்னை உறங்க விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது என்பதை மட்டுமே இந்த பதிவில் சொல்ல விரும்புகிறேன்.

 செல்லா நோட்டு விவகாரத்தால் அவதிப் பட்ட அந்த நாட்கள்.

அன்றாடம் உயர்ந்து கொண்டிருந்த டீசல் ,பெட்ரோல் விலை பதினைந்து நாட்களாக உயராத மாயாஜாலம்,

உளவுத்துறை அறிக்கையை அலட்சியம் செய்து புல்வாமாவில் ராணுவ வீரர்களின் உயிரைக் குடித்த கொடூரம்,

மாட்டுக் கறியின் பெயரால் கொல்லப்பட்டவர்கள்.

நீட் பலி கொண்ட அனிதா உள்ளிட்டவர்கள்.

இளவரசன், சங்கர், கோகுல்ராஜ் என ஆணவக் கொலைக்கு பலியானவர்கள்,

ஜாதி வெறிக்கு பலியான ரோஹித் வெமுலா,

மத வெறிக்கு பலியான நரேந்திர தாபோல்கர், கோவிந்த் பன்ஸாரா, எம்.எம்.கல்புர்கி, கௌரி லங்கேஷ்

ஆசிபா வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக தேசியக் கொடியோடு ஊர்வலம் போனவர்கள்,

உபி மாநிலத்தையே பாலியல் குற்றவாளிகளுக்கான உல்லாசபுரியாக மாற்றி வைத்துள்ளவர்கள்,

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள்.

பொள்ளாச்சியில் பாலியல் கொடுமைக்கு உள்ளானவர்கள், அவர்களை பாதுகாப்பவர்கள்.

குடியுரிமைச்சட்ட போராட்டத்தில் சங்கிகள் தூண்டிய கலவரத்தில் மடிந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், மாணவர்கள், அச்சட்டத்தால் அஸ்ஸாமில் நடுங்கிக் கொண்டிருப்பவர்கள்.

சாத்தான் குளத்தில் கொல்லப்பட்ட வணிகர்களான தந்தை மகன்.

வேளாண் சட்டங்களால் எதிர்காலத்தை இழக்கும் விவசாயிகள்.

பறி போகும் மாநில உரிமைகள்.

 

இவற்றையெல்லாம் நான் மறக்க மாட்டேன். நீங்களும் மறக்காதீர்கள் என்று மட்டுமே கேட்டுக் கொள்கிறேன்.

 

மேலே உள்ள படம் இன்றைய இந்து நாளிதழில் விளம்பரம். இதற்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை உண்டா தேர்தல் ஆணையாளர்களே?

 

No comments:

Post a Comment