Thursday, April 8, 2021

ஜீன்ஸ் பெரியாருடன் ஒரு புகைப்படம்

 வாங்குவதில் இல்லை பெருமை.

 


புத்தக விழா சென்று வந்து ஒரு மாதம் கழித்தே வாங்கிய புத்தகங்களை பட்டியல் போட முடிந்தது.

 முன் கூட்டியே திட்டமிட்டு எக்ஸெல் ஷீட் போட்டு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொண்டாலும் கிளம்பும் வேளையில் அந்த பிரிண்டை எடுத்து வைத்துக் கொள்ள மறந்து விட்டேன்.

 அதனால் வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியெல்லாம் முக நூல் பார்த்து அந்த விபரங்களை மீண்டும் சேகரித்து ஸ்டால் எண் வரிசையில் எழுதிக் கொண்டேன்.  இந்தாள் என்ன ஏதாவது பரிட்சைக்கா போகிறார், இப்படி குறிப்பெடுத்துக் கொண்டே இருக்கிறார் என்று ஓட்டுனர் அவ்வப்போது ஒரக்கண்ணால் பார்த்ததை கவனித்தும் கவனிக்காதது போல இருந்து விட்டேன்.  ஒரே ஒரு முறை வாங்கிய இ.பாஸ் காரிலேயே இருந்ததால் காகிதத்திற்கு சிரமப்பட வேண்டிய தேவை ஏற்படவில்லை. படிப்பதற்காக எடுத்துச் சென்ற நூலைத்தான் படிக்க முடியவில்லை.

 ஒரு யூ டர்ன் போட்டால் புத்தக விழா மையம் வந்து விடும் என்ற நிலையில் இருபது நிமிடம் போக்குவரத்து நெரிசல். மீடியன் சுவரை தாண்டி குதித்து செல்லும் வயதையெல்லாம் கடந்தாகி விட்டது. வேறென்ன செய்ய! காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

 புது பட்டியலை தயார் செய்ய முடிந்ததால் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்ததில் பெரும்பாலானவற்றை வாங்க முடிந்தது. கூடவே வேறு பலவும்.

 கொரோனா காலமாக இருந்தாலும் கூட்டத்திற்கு குறைவில்லை. புத்தக விற்பனை அதிகமாக வேண்டும் என்றால் பபாசி அடுத்த வருடத்திலிருந்தாவது ட்ராலி வசதியை வாடகைக்காவது ஏற்பாடு செய்ய வேண்டும். முதல் கட்டைப் பை நிரம்பியதும் பாரதி புத்தகாலயம் சென்றேன். அங்கே வாங்கிய புத்தகங்களையும் அதிலே வைத்து தோழர் சிராஜிடம் சொல்லி விட்டு மீதமுள்ள ஸ்டால்களுக்கு சென்றேன்.

 ஓய்வு பெற்ற தோழர் ஒருவரின் கணவர் “வேள்பாரி” வாங்கி வரச் சொல்லி இருந்தார். உள்ளடக்கம் போலவே நூலும் கனம் அல்லவா! சுமக்க முடியவில்லை. (பின் என் மகனிடம் சொன்ன போது உங்கிட்ட இருக்கிற புக்கை அவர் கிட்ட படிக்க கொடுத்திருக்கலாமே என்றான். அது என்னமோ புத்தகங்களை இரவல் கொடுக்கவே மனது வருவதில்லை. நானும் இரவல் வாங்குவதையும் முக்கியமாக சுடுவதையும் நிறுத்தி இருபத்தி ஐந்து ஆண்டுகளாகி விட்டது.) அதன் பின்பு வேகம் குறைந்து விட்டது. இரண்டு பைகளையும் தூக்கிக் கொண்டு கார் வரை செல்ல வேண்டுமே என்று கலக்கமாக இருந்தது.

 நல்ல வேளையாக நான் வெளியே வந்த வழி கார்கள் வெளியே வரும் வழி என்பதால் ஓட்டுனரை வரச் சொல்லி விட்டு காத்திருந்தேன்.

 புத்தக விழா முகப்பில் க்டந்த வருடம் கீழடியின் மாதிரி, அதற்கு முந்தைய வருடம் திருவள்ளுவர் சிலை என புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு வசதியாக வைத்திருந்தார்கள். இந்த வருடம் ஏதாவது வைத்திருந்தார்களா என்பதை நான் கவனிக்கவில்லை.

 “எதிர் வெளியீடு” அரங்கில் “ஜீன்ஸ் பெரியாருடன் ஒரு செல்ஃபி” என்று ஒரு ஏற்பாடு இருந்தது. ( சுகுணா திவாகர் சிறுகதை தொகுப்பான “அஞ்சிறைத் தும்பி” நூலில் ஜீன்ஸ் பெரியார் என்றொரு சிறுகதை உண்டு) நமக்கு செல்ஃபி சரியாக வராது என்பதால் அந்த அரங்கு ஊழியரையே புகைப்படம் எடுக்கச் சொன்னேன்.

 


பட்டியலை தாமதமாக வெளியிட்டாலும் மூன்று புத்தகங்களை படித்து முடித்து ஒரு நூலுக்கு அறிமுகமும் எழுதி விட்டேன். வாங்கிய நூல்களின் எண்ணிக்கை.  போன வருடத்தை விட கொஞ்சம் குறைவுதான்.   ஆனால் பக்கங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரே அளவுதான். 

வாங்குவதில் இல்லை பெருமை, வாசிப்பதில்தான் இருக்கிறது என்று எனக்கு நானே BE CAREFUL சொல்லிக் கொண்டு பட்டியலை பகிர்கிறேன்.

எண் பெயர் ஆசிரியர் தன்மை பக்கங்கள்
1 இது எனது நகரம் அல்ல தஸ்லிமா நஸ் ரீன் தமிழில் யமுனா ராஜேந்திரன் கவிதைகள் 126
2 விடுபட்டவர்கள் இனியன் ராமமூர்த்தி கட்டுரைகள் 77
3 பாக்களத்தம்மா புலியூர் முருகேசன் நாவல் 160
4 படுகை தழல் புலியூர் முருகேசன் நாவல் 158
5 தட்டப்பாறை முகமது யூசுப் நாவல் 530
6 புனை பாவை இரா.முருகவேள் நாவல் 362
7 எருமை தேசியம் காஞ்ச அய்லய்யா தமிழில் கவின் மலர் கட்டுரைகள் 336
8 இச்சா ஷோபா சக்தி நாவல் 302
9 பேரருவி டி.கே.கலாபிரியா நாவல் 270
10 அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி ஏ.கரீம் சிறுகதைகள் 120
11 அடையாள மீட்பு கூகி வா தியாங்கோ தமிழில் அ.மங்கை கட்டுரைகள் 142
12 இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி? சிவ சங்கர் சிங் தமிழில் இ.பா.சிந்தன் கட்டுரைகள் 296
13 ஆடு ஜீவிதம் பென்யாமின் தமிழில் விலாசினி ரமணி நாவல் 216
14 கூடு திரும்புதல் எளிதல்ல தங்கம் மூர்த்தி கவிதைகள் 120
15 அமேசான் காடும் சில பேரழகிகளும் வினாயக முருகன் கட்டுரைகள் 152
16 சங்கச்சுரங்கம் ஆர்.பாலகிருஷ்ணன் சங்க இலக்கியம் 262
17 இரும்புப் பெண்மணி சோ.மோகனா வாழ்க்கை வரலாறு138 138
18 தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும் பக்தவத்சல பாரதி ஆய்வுக் கட்டுரைகள் 86
19 மயானக்கரையின் வெளிச்சங்கள் சம்சுதீன் ஹீரா சிறுகதைகள் 120
20 லெனின் 150 என். குணசேகரன் கட்டுரைகள் 72
21 வாஷிங்டன் தோட்டாக்கள் விஜய் பிரசாத் தமிழில் பேரா.பொன்னுராஜ் கட்டுரைகள் 183
22 அறிவியல் பார்வை என்றால் என்ன? சு.பொ. அகத்தியலிங்கம் கட்டுரைகள் 30
23 சோஷலிசம் - ஒரு முன்னோட்டம் சு.பொ. அகத்தியலிங்கம் கட்டுரைகள் 56
24 ஊமையன் கோட்டை கண்ணதாசன் நாவல் 168
25 அலைகள் கண்ணதாசன் கட்டுரைகள் 126
26 வரலாறும் வக்கிரங்களும் ரொமிலா தாப்பர் தமிழில் நா.வானமாமலை கட்டுரைகள் 64
27 கோலப்பனின் அடவுகள் பிரபு தர்மராஜ் நாவல் 243
28 தீரா நதி வண்ணதாசன் சிறுகதைகள் 156
29 அன்பே தவம் குன்றக்குடி அடிகளார் கட்டுரைகள் 320
30 பாலபாரதி கவிதைகள் பாலபாரதி கவிதைகள் 144
31 மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லை யமுனா ராஜேந்திரன் குர்திஸ் கவிதைகள் 140
32 தமிழ்நாடு எஸ். எஸ். ஆனந்தர் கட்டுரைகள் 72
33 இசைபட வாழ்தல் டாக்டர் ஜி.ராமானுஜம் கட்டுரைகள் 80
34 அஞ்சிறை தும்பி சுகுணா திவாகர் சிறுகதைகள் 360
35 மயில் புராணம் இந்த்ஜார் ஹூசைன். தமிழில் கே.நல்லதம்பி சிறுகதைகள் 232
36 தாயார் சன்னதி சுகா கட்டுரைகள் 247
37 தமிழ்க்கலை மணிகள் கி.பார்த்திபராஜா கட்டுரைகள் 144
38 டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவை உரைகள் தொகுப்பு ச.வீரமணி உரைகள் 310
39 அநீதிக் கதைகள் அருண்.மோ சிறுகதைகள் 134
40 அஷேரா சயந்தன் நாவல் 256
41 யானைச் சொப்பனம் இரா.நாறும்பூநாதன் கட்டுரைகள் 174
42 வெண்ணிற நினைவுகள் எஸ்.ராமகிருஷ்ணன் திரைப்படங்கள் 146
43 பாரி ஆட்டம் வ.கீரா நாவல் 86
44 தேர்ந்தெடுத்த சிறுகதைகள் கி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 238
45 ஏகாதிபத்தியத்தின் புதிய சாகசம் ஆர்.கோவிந்தராஜன் கட்டுரைகள் 160
8314






 

1 comment:

  1. பட்டியலுக்கு நன்றி. சில புத்தகங்கள் தலைப்பு கிடைத்தன. எல்லாமே புரட்சி தலைப்பு... உங்களைப் போலவே.. அன்புடன் ஸ்ரீநாத்.

    ReplyDelete