வதந்திகள் எப்படி பரப்பப் படுகிறது பாருங்கள்!
கீழே
உள்ள படங்களை எங்களது மேற்கு வங்கத் தோழர் அனுப்பினார்.
அத்துடன்
அனுப்பிய செய்திகளில்
700
கோடி ரூபாய் ரொக்கம்,
260
கிலோ தங்கம்
3000
கோடி ரூபாய்க்கு கணக்கில் வராத சொத்துக்களின் ஆவணங்கள்
ஆகியவை
நேற்று மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்டது என்ற
தகவலும் சேர்ந்தே வந்தது. இதுதான் அவரது பிரம்மாண்டமான
மாளிகை என்றும் சொல்லப் பட்டிருந்தது.
இது
வெறும் வதந்தி, அங்கே இருந்த பணம் வெறும் ஒரு லட்சத்து சில்லறை என்றும் அதையும் திருப்பிக்
கொடுத்து விட்டார்கள். அது தனி மாளிகை அல்ல, ஒரு அபாட்மெண்ட் என்றும் அவருக்கு விளக்கினேன்.
மேற்கு
வங்கத்தில் இந்த செய்திதான் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார். எனக்கு
செய்தி வந்த க்ரூப்புக்களில் உங்கள் செய்தியை பகிர்ந்து கொள்கிறேன். ஆனால் எத்தனை லட்சம்
பேருக்கு இந்த செய்தி பரவியுள்ளதோ! அதை எத்தனை பேர் நம்பினார்களோ என தெரியவில்லை என்றார்.
தமிழகத்தின்
செய்தியை மேற்கு வங்கத்தில் ஏன் பரப்ப வேண்டும் என்ற என் கேள்விக்கு அவரே பதிலளித்தார்.
இப்படிப்பட்ட
கட்சியோடுதான் சி.பி.எம் கூட்டணி வைத்துள்ளது என்று இச்செய்திக்கு எதிர்வினையாக சிலர்
பின்னூட்டம் போடுகிறார்கள். சி.பி.எம் மிற்கு எதிராக பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக்
கூட இப்படி ஒரு வதந்தியை பரப்பியிருக்கலாம் என்று அவர் முடித்தார்.
நல்ல
செய்தி அடுத்த தெருவை அடையும் முன்பு வதந்தி உலகை மூன்று முறை சுற்றி வந்து விடுகிறது.
பாதிக்கப்பட்டவர்களால் தங்கள் நிலையை விளக்கும் முன்பே அவர்கள் பெயர் டோட்டல் டேமேஜ்.
வதந்திகளின் நோக்கம் அதுதானே!
No comments:
Post a Comment